Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 நவம்பர், 2020

நோய்களுக்கு அற்புத தீர்வு தரும் விஷ்ணு கிராந்தை மூலிகை...!!

 Vishnukranthi

விஷ்ணுகிராந்தியை வேரோடு பறித்து, தினமும் பாக்கு அளவு எடுத்து, பசும்பால் அல்லது ஆட்டுபாலில் அரைத்து உண்டால், மறந்து போன நினைவுகள் திரும்பும்.  

அஸ்தி சுரம் எனும் எலும்பைத் தாக்கும் கொடுமையான சுரம் போகும். இளைத்த தேகம் தேறும். கண்பார்வை சீராகும். சுவாசத்தை சீராக்கும்.

குறிப்பாக, விஷக்காய்ச்சலுக்கு விஷ்ணுகிராந்தி, நிலவேம்பு, பற்பாடகம், சீந்தில் கொடி, ஆடாதொடை ஆகிய மூலிகைகளை மொத்தமாக ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி மிளகு, கிராம்புத்தூள் கலந்து வயிறு காலியாக இருக்கும் போது மூன்று வேளை குடித்தால், 5  நாட்களில் காய்ச்சல் சரியாகும். பெரியவர்கள் 150 மில்லியும், குழந்தைகள் 75 மில்லியும் குடிக்கலாம். பக்கவிளைவு எதுவும் கிடையாது என்கிறது, சித்தமருத்துவம்.

கபவாத சுரம் என்ற வகையைச் சேர்ந்த டெய்கு காய்ச்சலுக்கு, ஆரம்ப நிலையில் நிலவேம்புக் கசாயம் சிறந்தது. டெங்கு காய்ச்சலுக்கான வைரஸை அழிக்கும் தன்மை நிலவேம்புக்கு உண்டு. 

டெங்கு காய்ச்சலுக்கு விஷ்ணுகிராந்தி வேர்-6, கீழாநெல்லி வேர்-6, ஆடாதொடை இலை-8 ஆகிய மூலிகைனளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், சித்தரத்தை, தானிப்பச்சரிசி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா பரங்கிப்பட்டை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்குடல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில்  கிடைக்கின்றன. 

இந்தப்பொடியை ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள மூலிகைகளுடன் சேர்த்து 4 லிட்டர் தண்ணீர் கலந்து 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு இதை ஒரு லிட்டராகச் சுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். 

இந்தக் கஷாயத்தை பெரியவர்களுக்கு 100 மில்லி அல்லது  சிறியவர்களுக்கு 50 அல்லது 25 மில்லி குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். தினமும் மூன்று  வேளை எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால், டெங்கு மட்டுமல்ல, விடாத காய்ச்சலும் விலகி ஓடும்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக