Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

28-02-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

மாசி 16 - வெள்ளிக்கிழமை

🔆 திதி : காலை 07.17 வரை அமாவாசை பின்பு பிரதமை

🔆 நட்சத்திரம் : மாலை 03.04 வரை சதயம் பின்பு பூரட்டாதி

🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.28 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 மாலை 03.04 வரை பூசம் பின்பு ஆயில்யம்

பண்டிகை

🌷 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

வழிபாடு

🙏 மகாலட்சுமி வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 கரிநாள்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 கல்வி கற்க ஏற்ற நாள்.

🌟 மருந்து செய்வதற்கு உகந்த நாள்.

🌟 கோயில் மதில் கட்டுவதற்கு நல்ல நாள்.

🌟 விதை விதைக்க உகந்த நாள்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 09.13 AM முதல் 10.57 AM வரை 

ரிஷப லக்னம் 10.58 PM முதல் 01.00 PM வரை

மிதுன லக்னம் 01.01 PM முதல் 03.11 PM வரை

கடக லக்னம் 03.12 PM முதல் 05.19 PM வரை

சிம்ம லக்னம் 05.20 PM முதல் 07.21 PM வரை 

கன்னி லக்னம் 07.22 PM முதல் 09.21 PM வரை 

துலாம் லக்னம் 09.22 PM முதல் 11.27 PM வரை 

விருச்சிக லக்னம் 11.28 PM முதல் 01.38 AM வரை 

தனுசு லக்னம் 01.39 AM முதல் 03.46 AM வரை 

மகர லக்னம் 03.47 AM முதல் 05.40 AM வரை

கும்ப லக்னம் 05.41 AM முதல் 07.27 AM வர

மீன லக்னம் 07.28 AM முதல் 09.08 AM வரை
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
 இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மேஷம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு நன்மைகளை செய்வீர்கள். பழைய பிரச்சனையொன்று முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : வரவுகள் உண்டாகும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்
---------------------------------------
ரிஷபம்

சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் சந்திப்புகள் ஏற்படும். பாதியில் நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். திடீர் வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பணவரவு திருப்தியை அளிக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
ரோகிணி : கையிருப்புகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.
---------------------------------------
மிதுனம்

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உயர்கல்வியில் இருந்துவந்த தடைகள் குறையும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபார பணிகளில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். பாராட்டு கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : சிந்தனைகள் உண்டாகும். 
திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
கடகம்

திட்டமிட்ட பணிகளில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோக ரீதியான மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயல்படவும். வெளியூர் பயணங்களில் விவேகம் வேண்டும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்

புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூசம் : அனுசரித்துச் செல்லவும். 
ஆயில்யம் : விவேகம் வேண்டும்.
---------------------------------------
சிம்மம்

மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

மகம் : ஆசைகள் பிறக்கும்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
கன்னி

எடுத்துச் செல்லும் உடமைகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் வசதிகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூக பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி லாபத்தை மேம்படுத்துவீர்கள். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும். 
அஸ்தம் : ஆதரவான நாள்.
சித்திரை : லாபம் மேம்படும்.
---------------------------------------
துலாம்

சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உறவு வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வாகனம் மீதான ஆர்வங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் அனுபவம் மேம்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் சுப காரியம் கைகூடும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
சுவாதி : அனுபவம் மேம்படும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்

உயர்கல்வியில் தெளிவுகள் உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுபகாரியம் கைகூடுவதற்கான சூழல்கள் தோன்றும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். தூரதேச பயணம் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நன்மை தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். செலவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : தெளிவுகள் உண்டாகும். 
அனுஷம் : பொறுப்புகள் அதிகமாகும். 
கேட்டை : திருப்தியான நாள்.
---------------------------------------
தனுசு

கடன் விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும். தள்ளிப் போன காரியங்கள் சில முடியும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சவாலான செயலை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். பயம் விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். 
உத்திராடம் : செல்வாக்கு உயரும். 
---------------------------------------
மகரம்

எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திராடம் : வாய்ப்பு உண்டாகும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்

முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படவும். வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கிய சிந்தனை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே பொறுமை அவசியம். லாபம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
---------------------------------------
மீனம்

பணிகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். தொழில் நிமித்தமான நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். உலக நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைபோக்கில் சில மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : திருப்பங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும். 
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக