Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 நவம்பர், 2020

Poco M3 : வேற லெவெல் டிசைன்; தரமான ஸ்பெக்ஸ்; நவ.24 ஒரு தரமான சம்பவம் இருக்கு!

போககோ நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆன போக்கோ எம் 3 மாடலின் டிசைன் மற்றும் கேமரா அம்சங்கள் வெளியாகியுள்ளன.

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட தயாராக உள்ளது. இந்நிலைப்பாட்டில் அறிமுகத்திற்கு முன்னதாகவே இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் போஸ்டர் ஒன்று லீக் ஆகியுள்ளது.

அதன் வடலியாக போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் முக்கிய வடிவமைப்பு விவரங்கள் மற்றும் சாத்தியமான வண்ண விருப்பங்களையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

போக்கோ எம் 3 பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் மஞ்சள், நீலம் மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் வரும் என்பதை வெளியான போஸ்டர் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவானது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்புக்கு உட்பொதிக்கப்பட்டுள்ளது.

முந்தைய லீக்ஸ் தகவல்கள் போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC மூலம் இயக்கப்படும் என்று கூறுகின்றன.

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் விளம்பர போஸ்டரை முதலில் வெளியிட்டது 91 மொபைல்ஸ் வலைத்தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளியான போஸ்டர் ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் பக்க வடிவமைப்பைக் காட்டுகிறது.


அதன்வழியாக போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பு இருப்பதையும், டிஸ்ப்ளேயின் அடிப்பகுதியில் லேசான கன்னப்பகுதி இருப்பதையும் மற்றும் தட்டையான விளிம்புகளைக் கொண்டுள்ளதையும் அறிய முடிகிறது. இதன் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் டிஸ்பிளேவின் வலது விளிம்பில் அமர்ந்திருப்பதையும் காணமுடிகிறது.

பின்புறத்தில், போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான dual-palette வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது கருப்பு செவ்வகத்துடன் மேல் பகுதியில் கேமரா அமைப்பு மற்றும் நிறுவனத்தின் லோகோவால் நிரப்பப்பட்டுள்ளது.

கேமரா தொகுதியில் மூன்று சென்சார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமர்ந்து ஃபிளாஷ் ஆதரவையும் பெற்றுள்ளது. நிறுவனத்தின் லோகோவானத்து கேமரா அமைப்பிற்கு பக்கதில் அதாவது கேமரா தொகுதிக்கு இணையாக அமர்ந்திருக்கிறது. பின்புற பேனலின் மீதமுள்ள இடம் மஞ்சள், நீலம் அல்லது கருப்பு நிறங்களால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, இது 6.53 இன்ச் அளவிலான புல் எச்டி + வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC மூலம் இயக்கப்படலாம். இதன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனில் இரட்டை ஸ்பீக்கர்களுடன் 6,000 எம்ஏஎச் பேட்டரி பேக் செய்யப்படலாம், இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக