Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 நவம்பர், 2020

WhatsApp இல் இரண்டாவது Mute அம்சம்; இது எதுக்கு யூஸ் ஆகும்?




வாட்ஸ்ஆப்பில் வரப்போகும் மியூட் வீடியோ எனப்படும் அம்சம்... என்ன பயன்.. எப்போது வரும்...

இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது, இது பயனர்கள் தங்கள் வீடியோக்களை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அல்லது அவற்றை ஸ்டேட்டஸ் ஆக வைப்பதற்கு முன் ம்யூட் செய்ய அனுமதிக்கிறது.


வாட்ஸ்ஆப்பின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து அறிக்கை வெளியிடும் வலைத்தளமான WABetaInfo மூலம் கண்டறியப்பட்டபடி, பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்நிறுவனம் இப்போது புதிய ம்யூட் வீடியோ (mute video) அம்சத்தை உருவாக்கி வருகிறது, அது பீட்டா அப்டேட்டிலும் தோன்றியுள்ளது.

வாட்ஸ்ஆப்பின் புதிய அம்சங்களை ட்ராக் செய்வதில் கில்லாடியான WABetaInfo தளம் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில், வழக்கமாக காணப்படும் டிரிம்மிங் விருப்பத்துடன் வீடியோவை ம்யூட் செய்வதற்கான ருப்பத்தையும் ஒருவர் காணலாம்.

“மேம்பட்ட வால்பேப்பர் அம்சங்கள் மற்றும் காணாமல் போன செய்திகளை இயக்கிய பிறகு, வாட்ஸ்அப் இப்போது புதிய அம்சங்களில் செயல்படுகிறது. எதிர்கால புதுப்பிப்பில் கிடைக்கும் அடுத்த அம்சம், தொடர்புக்கு அனுப்புவதற்கு முன் அல்லது உங்கள் நிலை புதுப்பிப்புகளை முடக்குவதற்கு முன் வீடியோக்களை முடக்க அனுமதிக்கும் ”என்று WABetaInfo இன் அறிக்கை படித்தது.


இது தவிர வாட்ஸ்ஆப் நிறுவனம் Advanced Wallpaper அம்சங்கள் மற்றும் Disappearing messages போன்ற புதிய அம்சங்களையும் அதன் பயனர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.

Advanced Wallpaper எனும் அம்சம் பயனர்கள் ஒவ்வொரு சாட்டிலும் வெவ்வேறு வால்பேப்பரை அமைக்க அனுமதிக்கிறது. இதன் கீழ் வாட்ஸ்ஆப்பில் உள்ள எல்லா சாட்களுக்கும் ஒரே வால்பேப்பரை அமைக்க நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது ஒவ்வொரு சாட்டிலும் கைமுறையாக வேறு ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

இதற்கிடையில், வாட்ஸ்ஆப் தனது புதிய ‘மறைந்துபோகும் மெசேஜஸ்’ அம்சத்தை இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.

வாட்ஸ்ஆப்பின் இந்த "மறைந்துபோகும் மெசேஜஸ்" அம்சம் ஒருமுறை இயக்கப்பட்டதும், குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு, அது மீடியா கோப்புகளாக இருந்தாலும் சரி, ஆடியோ கோப்புகளாக இருந்தாலும் சரி அல்லது சாதராண டெக்ஸ்ட் மெசேஜாக இருந்தாலும் சரி அது தானாகவே மறைந்துவிடும்.

இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சமானது இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமின்றி iOS பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது.

இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் முதலில் வாட்ஸ்ஆப்பை அதன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும். வாட்ஸ்ஆப்பின் மறைந்துபோகும் மெசேஜஸ் அம்சமானது iOS இல் வெர்ஷன் 2.20.121 உடன் வருகிறது, இது புதிய storage management tool மற்றும் mute a chat always போன்ற அம்சங்களையும் கொண்டுவருகிறது, Mute a chat always என்பது எப்போதுமே குறிப்பிட்ட ஒரு சாட்டை ம்யூட் செய்ய உதவுகிறது.

வாட்ஸ்ஆப்பின் Disappearing Messages அம்சத்தினை பயன்படுத்துவது எப்படி?

வழிமுறை 01 : அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப்பை ஓப்பன் செய்யவும்.

வழிமுறை 02: நீங்கள் இந்த டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் அம்சத்தை இயக்க விரும்பும் காண்டாக்ட்-ஐ தேர்வு செய்ய, குறிப்பிட்ட காண்டாக்-ஐ திறக்கவும், அதாவது அவரக்ளின் ப்ரோபைலுக்குள் செல்லவும், அதாவது சாட்டிற்குள் நுழைந்து குறிப்பிட்ட காண்டாக்டின் பெயரை கிளிக் செய்யவும்.

வழிமுறை 03 : அங்கே டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் எனும் புதிய அம்சத்தினை என்க்ரிப்ஷன் விருப்பத்திற்கு மேலே காண்பீர்கள். அதை கிளிக் செய்து பின்னர் குறிப்பிட்ட அம்சம் சார்ந்த தகவலை படித்துவிட்டு தொடரவும்.

வழிமுறை 04 : டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் என்கிற விருப்பதிற்குள், இது இயக்கப்பட்டதும், குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு அது தானாகவே மறைந்துவிடும் என்கிற குறிப்பு இடம்பெறும் அதன் கீழே ஆன் மற்றும் ஆப் என்கிற இரண்டு விருப்பங்கள் அணுக கிடைக்கும். இந்த புதிய அம்சம் டீபால்ட் ஆகவே ஆப்-இல் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் நீங்கள் ஆன் என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான்!

குறிப்பிட்ட விருப்பத்தை இயக்கிய பிறகு வாட்ஸ்ஆப் “நீங்கள் disappearing messages அம்சத்தினை இயக்கியுள்ளீர்கள். 7 நாட்களுக்குப் பிறகு சாட்டில் இருந்து புதிய மெசேஜ்கள் மறைந்துவிடும். இதை மாற்ற இங்கே கிளிக் செய்யவும்" என்கிற தகவல் குறிப்பிட்ட சாட்டில் அணுக கிடைக்கும்.

இந்த disappearing messages அம்சத்தினை நீங்கள் விரும்பும் போதெல்லாம் மாற்றுவதற்கான விருப்பமும் உங்களுக்கு இருக்கும். புதிய disappearing messages அம்சத்தை முடக்க மேற்குறிப்பிட்ட அதே செயல்முறையை மீண்டும் செய்யவும். ஆனால் கடைசியாக ஆன் என்பதற்கு பதில் ஆப் என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த அம்சம் இயக்கப்படும் போது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற செய்திகள் உள்ளிட்ட அனைத்து செய்திகளும் சாட்டிலிருந்து தானாகவே நீக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருப்பினும், ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்ட மீடியா கோப்புகள் அப்படியே இருக்கும். forwarded அல்லது quoted மெசேஜ்கள் தானாக நீக்கப்படாது என்பதையும் பயனர்கள் கவனிக்க வேண்டும். 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக