------------------------------------------------
சிரிப்பு வெடிகள்...!!
------------------------------------------------
மனைவி : என்னங்க செருப்பு காலை கடிக்குது.
கணவன் : அப்ப மாலையில் போட்டுக்கோ.
மனைவி : 😩😩
------------------------------------------------
TTR : ஏம்பா... ரயிலில் புகை பிடிக்க கூடாதுன்னு சட்டம் இருக்கே. உனக்கு தெரியாதா? எடு 200 ரூபாய்...
பயணி : என்ன சார் இது? அநியாயமா இருக்கு...
TTR : என்னப்பா அநியாயம்?
பயணி : ரயிலுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டமா?
TTR : என்னப்பா சொல்ற?
பயணி : ரயிலே புகை பிடிக்கும்போது அதுக்குள்ள இருக்கும் நான் மட்டும் புகைபிடிக்க கூடாதா?
TTR : 😧😧
------------------------------------------------
சீர் படுத்துங்கள்...!!
------------------------------------------------
த் ல் த ய ப் க டு து ப மை
வு க் ஆ ம் ய் ட கூ
ர் த த் ல் டு தொ போ
த் த ப் து டு ப து ரி
ய கா ரி சி ரி த
விடை :
மையகப்படுத்துதல்
ஆய்வுக்கூடம்
போர் தொடுத்தல்
துரிதப்படுத்து
காரியதரிசி
------------------------------------------------
கோபத்தின் கதை...!!
------------------------------------------------
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும், நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.
'இனிமேல் கோபம் வரும்போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்".
முதல்நாள் 10 ஆணி, மறுநாள் 7, பின்பு 5, 2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.
இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.
45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.
உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய்?
உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? உடனே அந்த இளைஞன் வெட்கி தலைகுனிந்தான்.
------------------------------------------------
குறளும், பொருளும்...!!
------------------------------------------------
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
பொருள் :
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.
பொழுதுபோக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக