இண்டேன், ஹெச்.பி., பார்த் கேஸ் சிலிண்டர்கள் புக்கிங்...
சிலிண்டர் புக்கிங்!
சமையல் சிலிண்டர்களைப் புக்கிங் செய்து வாங்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன், மொபைல் ஆப் போன்ற பல வசதிகள் இருக்கின்றன. இருந்தாலும் வாட்ஸ் ஆப் மூலமாக முன்பதிவு செய்து வாங்குவது எளிதாக உள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் தற்போது வாட்ஸ் ஆப் மூலமாக சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
உங்களது சிலிண்டர் இணைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து பெட்ரோலிய விநியோக நிறுவனங்களின் பிரத்தியேக வாட்ஸ் ஆப் எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொள்வதன் மூலம் சிலிண்டரை பதிவு செய்யலாம். உடனடியாக அந்த எண்ணிலிருந்து உங்களுக்கு உறுதிப்படுத்தும் செய்தி வரும். அதைத் தொடர்ந்து சிலிண்டருக்கான பணத்தைச் செலுத்துவதற்கான லிங்க் ஒன்றும் அனுப்பப்படும். அதன் மூலம் நீங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யூபிஐ போன்ற எந்த முறையிலும் பணத்தைச் செலுத்தலாம்.
பாரத் பெட்ரோலியம் வாடிக்கையாளர்கள் 1800224344 என்ற எண்ணுக்கும், இண்டேன் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணுக்கும், ஹெச்.பி. வாடிக்கையாளள் +91 92222 01122 என்ற எண்ணுக்கும் வாட்ஸ் ஆப் செய்ய வேண்டும்.
பாரத்: 1800224344
இண்டேன்: 7588888824
ஹெச்.பி.: +91 92222 01122
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக