Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 10 பிப்ரவரி, 2021

ஒருவழியாக 100 செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கிய கூகுள் நிறுவனம்.!

 00 செயலிகள் கூகுள்

அண்மையில் மிகவும் பிரபலமான பார்கோடு ஸ்கேனர் (Barcode Scanner)ஆப்-ஐ பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம். அதாவது தேவையில்லாத விளம்ரங்களை பயனர்களுக்கு அனுப்புவதாக வெளிவந்த புகாரின் பெயரில் இந்த ஆப் வசதி நீக்கப்பட்டது.

 

இந்த நிலையில் மீண்டும் பிளே ஸ்டோரில் இருந்து சுமார் 100 செயலிகளை அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். மேலும் வெளிவந்த தகலின்படி மத்திய அரசு உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதாவது இப்போது நீக்கப்பட்ட 100 செயலிகள் கூகுள் விதிகளுக்கு புறம்பாக தனிநபர் விவரங்களை சேகரித்து, அவற்றை தவறாக கையாண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

 

குறிப்பாக விதிகளுக்கு புறம்பாக சேகரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு அச்சுறுத்தல் செய்தல், மக்களை பயமுறுத்துதல், தவறான வகையில் கடன்களை திரும்ப வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் கூகுள் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.

 

பின்பு மத்திய அரசு அளித்த தகவல்களின் அடிப்படையில் டிசம்பர் 2020 முதல் ஜனவரி 20 2021 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 100 செயலிகளை அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

 

கூகுள் நிறுவனம்

குறிப்பாக தவறான செயல்களில் ஈடுபட்ட செயலிகள் உடனடியாக நீக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் இதேபோன்ற சேவைகளை தொடர்ந்து வழங்கி வரும் இதர செயலிகள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

பார்கோடு ஸ்கேனர்

 

இதற்குமுன்பு பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பார்கோடு ஸ்கேனர் ஆப் ஆனது பிளே ஸ்டோரிலிருநது சுமார் 10,000,000+ நிறுவல்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்களது டீபால்ட் பர்வுஸரை திறந்ததும் எங்கிருந்து வருகிறது என்று புரியாதவண்ணம் விளம்பரங்கள் வந்து குவிகின்றன என மால்வேர் பைட்ஸ் என்ற பாதுகாப்பு நிறுவனம் அதன் பிளாக் போஸ்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பயனர் ஒருவர், இந்த விளம்பரங்கள் பார்கோடு ஸ்கேனர் என்ற - நீண்டகாலமாக நிறுவப்பட்ட - ஆப்பில் இருந்து வருவதைக் கண்டறிந்தார்.

 

ஒருவழியாக இது பற்றி கூகுளை எச்சரித்த பிறகு, பிளே ஸ்டோரிலிருந்து இந்த பார்கோடு ஸ்கேனர் ஆப் நீக்கப்பட்டது. அதேசமயம் பயனர்கள் இனி இந்த பயன்பாட்டை பதிவிறக்க முடியாது என்றாலும் கூட, நீங்கள் ஏற்கனவே இந்த ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்வது மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக