Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 1 பிப்ரவரி, 2021

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72.!

சாம்சங் கேலக்ஸி ஏ72 டிஸ்பிளே

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ72 டிஸ்பிளே

வெளிவந்த தகவலின்படி இந்த சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மெமரி வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட்

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்.

சூப்பர்வைடு லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா +12எம்பி சூப்பர்வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த தரமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் சிவப்பு, நீலம், கருப்பு போன்ற நிறங்களில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைஃபை, மைக்ரோ யூஎஸ்பி, ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. மேலும் கைரேகை சென்சார் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் போன்ற அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் வெளிவந்த தகவலின்படி 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி 72 ஸ்மார்ட்போன் ரூ.39,800-விலையிலும், 8ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி 72 மாடல் ரூ.45,100-விலையிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!