Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 27 பிப்ரவரி, 2021

வந்தாச்சு புதிய JD.. ஜஸ்ட் டயல்-ன் புதிய அத்தியாயம்..!

 ஜஸ்ட் டயல்-ன் ஜேடி மார்ட்

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி வெடித்த பின்பு அனைத்து தரவுகளும் டிஜிட்டல் தளத்திற்கு வந்த பின்பு உள்ளூர் தகவல் தேடலில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வரும் ஜஸ்ட் டயல் புதிய வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.

இந்தியாவில் சுமார் 24 வருடமாக local discovery-யில் மிகப்பெரிய வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் வைத்துள்ளது ஜஸ்ட் டயல் முதல் முறையாக B2B பிரிவில் இறங்க முடிவு செய்து புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் பி2பி வர்த்தகத்தில் சில நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் தரவுகள் நிறைந்த ஜஸ்ட் டயல் இத்துறைக்கு வருவது மிகப்பெரிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜஸ்ட் டயல்-ன் ஜேடி மார்ட்

1996 முதல் இந்திய இண்டர்நெட் சேவை தளத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் ஜஸ்ட் டயல் சுமார் 25 வருடத்திற்குப் பின் B2B வர்த்தகப் பிரிவுக்குள் நுழைய முடிவு செய்து தற்போது JD மார்ட் என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் தளத்தை https://www.jdmart.com என்ற இணையத் தளம் வாயிலாகவும், https://www.jdmart.com/appwc இணைய முகவரி மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளைப் பெற முடியும் என ஜஸ்ட் டயல் தெரிவித்துள்ளது.

ஜேடி மார்ட் B2B தளம்

ஜேடி மார்ட் என்பது B2B வர்த்தகர்களாகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தளம் என்பதால், வர்த்தகர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் தரம் மற்றும் விற்பனையாளர்கள் அடிப்படையில் தேர்வு செய்து மொத்தமாகப் பொருட்களை வாங்க முடியும். மேலும் இன்றைய ஆன்லைன் B2B தளத்தில் இருக்கும் அனைத்து விதமான சேவைகளும் இப்புதிய ஜேடி மார்ட் தளத்தில் உள்ளது.

ஜஸ்ட் டயல் பங்குகள்

ஜேடி மார்ட் அறிமுகத்தின் எதிரொலியாகப் பிப்ரவரி 24ஆம் தேதி வெறும் 635 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட ஜஸ்ட் டயல் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் 818.95 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் பின்பு தொடர் சரிவில் இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் சோகமடைந்துள்ளனர்.


இந்தியாமார்ட் உடன் போட்டி

ஆன்லைன் B2B துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாமார்ட் நிறுவனத்துடன் ஜேடி மார்ட் நேரடியாகப் போட்டிப்போட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஈகாமர்ஸ்

இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகம் துவங்குவதற்கு முன்பாகவே இந்திய வர்த்தகர்களை இணைக்கும் மிகப்பெரிய இணையதளம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 5 வருடத்தில் இந்தியாவில் B2B இணையதள வர்த்தகத்தில் மிகப்பெரிய புரட்சி வெடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

2 கருத்துகள்: