
நோக்கியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 5.4 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 5.4
இந்த செய்தியை நன்கு அறிந்த செய்தி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நோக்கியா 5.4 போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம், என்ன விலையில் எதிர்பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.
இந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகமா?
இந்த பிப்ரவரி மாதத்தில் நோகியா 5.4 உடன் எச்.எம்.டி குளோபல் நிறுவனம் மேலும் சில சாதனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் கடந்த டிசம்பர் மாதம் ஐரோப்பாவில் 189 யூரோக்கள் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
இந்த மதிப்பின் படி இந்த புதிய நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் தோராயமாக சுமார் ரூ. 17,000 என்ற விலையில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் போலார் நைட் மற்றும் டஸ்க் வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்ன என்று பார்க்கலாம்.
நோக்கியா 5.4 சிறப்பம்சம்
- 6.39' இன்ச் 1520 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
- 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் / 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
- அண்ட்ராய்டு 10 மற்றும் ஆண்ட்ராய்டு 11 தயாராக உள்ளது
- குவாட்-கேமரா அமைப்பு
- 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
- 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- பின்புற கைரேகை சென்சார்
- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- 10W சார்ஜிங்
- 4,000 எம்ஏஎச் பேட்டரி
மொபைல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக