Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 2 மார்ச், 2021

தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்!

 

தினமும் 8 மணி நேரம் கடுமையாக வேலை செய்தால் தான் சம்பளம் என்ற நிலையில் தினமும் 9 மணி நேரம் தூங்கினால் ரூபாய் ஒரு லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த ‘வாக்ஃபிட்’ என்ற நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தூக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஏற்கனவே கடந்த ஆண்டு தூக்கம் குறித்து ஆய்வு செய்ய பலரை தேர்வு செய்து அவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பெங்களூரை சேர்ந்த ‘வாக்ஃபிட்’ நிறுவனம் மக்களின் தூக்க முறைகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ’ஸ்லீப் இன்டர்ன்ஷிப்’ முறையை சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி இந்த இன்டர்ன்ஷிப்’ முறைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தினமும் 9 மணிநேரம் தூங்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து நூறு நாட்கள் ஒன்பது மணி நேரம் தூங்கினால் அவர்களுக்கு ஒரு லட்சம் சம்பளம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு சம்பளம் கொடுக்கும் இந்த நிறுவனத்தின் அறிவிப்பால் ஆச்சரியமடைந்து பலர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!