Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 மார்ச், 2021

வேற லெவல் அனுபவத்திற்கு ரெடியா? ஆண்ட்ராய்டு 11 தளத்தில் முதல் TCL ஸ்மார்ட் டிவி மார்ச் 10 அறிமுகம்..

அண்ட்ராய்டு டிவி 11 அடிப்படையில் P725 டிவி

TCL நிறுவனம் வரும் மார்ச் 10 ஆம் தேதி இந்தியாவில் அதன் முதல் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இந்த புதிய ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஸ்மார்ட் டிவியுடன் நிறுவனம் புது சீரிஸ் ஹெல்த்தி ஏசி சாதனங்களையும் அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஸ்மார்ட் டிவி பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்..

ண்ட்ராய்டு டிவி 11 அடிப்படையில் P725 டிவி

CES 2021 இல் டிசிஎல் நிறுவனம் அறிவித்த P725 மாடலைப் பற்றி தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம். இந்த ஸ்மார்ட் டிவி அண்ட்ராய்டு டிவி 11 அடிப்படையில் இயங்கக்கூடியது. ஆனால், இந்த டிவி புதிய கூகிள் டிவி யுஐ உடன் வருமா என்பது இன்னும் தெளிவாக இல்லை, அல்லது இது நிலையான Android TV UI உடன் வருமா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. டி.சி.எல் இன் வலைத்தளம் "புதிய பெரிய அனுபவம்" மற்றும் "வேகமான பிராசஸர்" என்று டீஸ் செய்துள்ளது.

TCL P725 டிவி

TCL நிறுவனத்தின் இந்த சமீபத்திய டீசர் பயனர்கள் எதிர்பார்க்கக்கூடிய சில அம்சங்களைக் குறிக்கிறது. புதிய TCL P725 டிவி, டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் 4K அனுபவத்தை வழங்குகிறது. இது அனைத்து பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான ஆதரவுடன் எல்.ஈ.டி-பேக்லிட் எல்சிடி டிவி ஆகும்.

5000+ பயன்பாடுகள் மற்றும் கேம்கள்

இது Android OS இல் இயங்கக்கூடியது என்பதனால் கூகிள் ​​பிளே ஸ்டோரில் உள்ள Android TV தளத்தில் இருக்கும் 5000+ பயன்பாடுகள் மற்றும் கேம்களை இது ஆதரிக்கிறது. இது தவிர, 4K HDR P725 டிவி மோஷன் எஸ்டிமேஷன் மற்றும் மோஷன் காம்பன்சேஷன் (MEMC) ஆதரவு உடன் வருகிறது.

மிரட்டலான ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

இது பிஃரேமை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனுடன், டிடிஎஸ் டிகோடிங் டெக், கூகிள் வாய்ஸ் அசிஸ்டன்ட், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் 2.0, செட் ரீமைண்டர், ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற பல ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவியும் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

விலை பற்றிய தகவல் என்ன ஆச்சு?

டிவியின் விலை நிர்ணயம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை, ஆனால், இது ஸ்மார்ட் டிவி சந்தை போக்கைத் தொடர்ந்து இது மிகவும் தீவிரமான விலையில் நிர்ணயம் செய்யப்பட்டு வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி மார்ச் 10ம் தேதி அறிமுகம் என்பதனால் விலை பற்றிய தகவலை அரிய நாம் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக