சமீபத்திய அறிவிப்புப் படி, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய ஐபோன் 13 மாடல் சாதனம் 1TB வரையிலான அதிகபட்ச இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ஐபோன் 12 சாதனத்தில் அதிகபட்சமாக 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், ஆப்பிள் நிறுவனம் இப்போது ஸ்டோரேஜ் விருப்பத்தை ஒரு படி மேலே கொண்டு செலும் என்று தெரிகிறது.
1TB ஸ்டோரேஜ் விருப்பத்துடன் ஐபோன் 13
இது நடப்பதற்கு அதிகப்படியான சாத்தியக்கூறு இருப்பதாக சமீபத்திய அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. ஐபோன் 13 சாதனத்தில் நாம் 1TB ஸ்டோரேஜ் விருப்பத்தையும் இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து ஐபோன் 13 மாடல்களிலும் லிடார் (LiDAR) தொழில்நுட்பத்தின் மேம்பாடுகள் இருக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.
ஐபோன் 13 இன் அனைத்து மாடல்களிலும் இது இருக்குமா?
தற்போது வரை, ஆப்பிள் வரவிருக்கும் ஐபோன் வரிசையில் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
சமீபத்திய 9to5Mac இன் அறிக்கை, ஐபோன் 13 1TB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கும் என்று கூறுகிறது. இது ஐபோன் 13 உடன் வழங்கப்படும் சேமிப்பக விருப்பங்களில் ஒன்றாக இருக்கும், இந்தத் தொடரின் அனைத்து மாடல்களிலும் இது இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஐபாட் புரோ மாடல்கள் 1TB ஸ்டோரேஜ்
இப்போது வரை, ஆப்பிள் தனது ஐபோன் மாடல்களுடன் அதிகபட்ச ஸ்டோரேஜ் திறனாக 512 ஜிபி வரை வழங்கியுள்ளது. அதேசமயம், ஐபாட் புரோ மாடல்கள் 1TB ஸ்டோரேஜ் உடன் வருகின்றது.
ஐபோன் 13 க்கான 1TB சேமிப்பிடம் குறிப்பிடப்படுவது இது முதல் முறை அல்ல, இதற்கு முன்னர் ஜனவரி மாதத்தில், ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் 1TB வரை ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று டிப்ஸ்டர் ஜான் ப்ராஸர் யூடியூப்பில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன்பு இதில் மட்டுமே LiDAR
Wedbush வெளியிட்டுள்ள தகவலில் ஐபோன் 13 மாடல்கள் LiDAR மேம்பாடுகளை ஆதரிக்கும் என்றும், அனைத்து ஐபோன் 13 மாடல்களிலும் லிடார் மேம்பாடுகளை நாம் எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, ஐபோன் 12 தொடரில், ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் வகைகளில் மட்டுமே லிடார் சென்சார்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 13ல் ஆல்வேஸ்-ஆன்-டிஸ்பிளேவா?
அதேபோல் சமீபத்திய அறிக்கை ஒன்று, ஐபோன் 13 மினி சாதனத்தையும் நாம் 2021ல் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளது. ஐபோன் 12 மினி மோசமான விற்பனையைச் சந்தித்தபோதிலும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 மினி சாதனத்தை உருவாக்குகிறது என்பது என்ன அர்த்தத்தில் என்பது தெரியவில்லை. அதேபோல், ஐபோன் 13 சாதனம் ஆல்வேஸ்-ஆன்-டிஸ்பிளே உடன் வெளிவரும் என்பது கூடுதல் தகவல்.
மொபைல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக