
இந்தியாவின் முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் தனது வர்த்தகத்தை வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் துறையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில், பல நிறுவனங்களை வாங்கித் தனது வர்த்தகக் குடையின் கீழ் சேர்த்து வருகிறது.
இதன் படி டாடா குழுமம் பிக்பேஸ்கட் மற்றும் ஆன்லைன் மருத்து விற்பனை சேவை நிறுவனமான 1MG-ஐ கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்
100 கோடி ரூபாய் கடன்
ஆன்லைன் மருத்து விற்பனை சேவை அளிக்கும் 1MG நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் டாடா டிஜிட்டல் நிறுவனம், கைப்பற்றலுக்கு முன்பாகவே compulsorily convertible debentures (CCD அல்லது சிசிடி) வாயிலாகச் சுமார் 100 கோடி ரூபாய் தொகையைக் கடனாக முதலீடு செய்துள்ளது.
டாடா டிஜிட்டல் நிறுவனம்
இதற்காக 1MG நிறுவனம் டாடா டிஜிட்டல் நிறுவனத்திற்கு ஒரு சிசிடி 34,417 ரூபாய் விலையில் சுமார் 29,054 சிசிடி-ஐ ஒதுக்கீடு செய்துள்ளது. சிகோயா நிறுவனத்தின் பெறு முதலீட்டில் இயங்கும் 1MG நிறுவனம் டாடா டிஜிட்டல் நிறுவனம் அறிவித்துள்ள 100 கோடி ரூபாய் கடனில் முதல்கட்டமாக 25 கோடி ரூபாய் கடனை பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 75 கோடி ரூபாய் தொகையை விரைவில் அளிக்க உள்ளது.
1MG நிறுவனத்தின் மதிப்பு
இந்தக் கடனுக்காக மதிப்பீடு செய்யப்பட்டபோது டாடா டிஜிட்டல் நிறுவனம் சுமார் 8 வருடமாகச் சந்தையில் இயங்கி வரும் 1MG நிறுவனத்தை 1,770 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. டாலர் மதிப்பில் கிட்டத்தட்ட 240 மில்லியன் டாலர். 1MG நிறுவனத்தில் டாடாவின் முதல் முதலீடாக இது உள்ளது.
சிசிடி மூலம் கடன்
டாடா முதலீடு செய்துள்ள இந்த 100 கோடி ரூபாய் கடனை சிசிடியாக வாங்கியிருந்தாலும் இதைப் பங்குகளாக மாற்றிக்கொள்ள முடியும், அந்த வகையில் இன்றைய வர்த்தக மதிப்பின் படி டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் 100 கோடி ரூபாய் கடனுக்கு 1MG நிறுவனத்தின் 5.66 சதவீத பங்குகளைப் பெற உள்ளது.
ஈகாமர்ஸ் வர்த்தகக் கனவு
150 வருடமாக இந்தியாவில் வர்த்தகம் செய்யும் டாடா குழுமம் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் ரிலையன்ஸ், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக வர்த்தகத்தைத் துவங்க முடிவு செய்துள்ளது. இதற்காக 2020 நவம்பர் மாதம் 1MG நிறுவனத்தில் இருந்து டாடா சுமார் 50 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டு இருந்தது.
வருவாய் அதிகரிப்பு
2019ஆம் நிதியாண்டில் வெறும் 202.3 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை மட்டுமே பெற்று இருந்த நிலையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட 2020ல் 1MG நிறுவனத்தின் வருவாய் 77 சதவீதம் வளர்ச்சி அடைந்து 358 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக