Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள் என்னென்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

-------------------------------------------------------------

தினேஷ் : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?

ரமேஷ் : பின்ன என்ன செய்யணும்?

தினேஷ் : கடிக்க... ஏதாவது?

ரமேஷ் : நாய் இருக்கு... அவுத்துவிடவா?

தினேஷ் : 😱😱

-------------------------------------------------------------

ஆசிரியர் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை?

மாணவன் : ஊறுகாய் சார்

ஆசிரியர் : 😬😬

-------------------------------------------------------------

இது எப்படி இருக்கு?

-------------------------------------------------------------

வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள்...

🍛 காலை சாப்பாடு

🍚 மதிய சாப்பாடு

🍝 இரவு சாப்பாடு

-------------------------------------------------------------

ஒளவையார் மொழி...!!

-------------------------------------------------------------

பெற்ற தாயே மேலான தெய்வம். தந்தையின் வழிகாட்டுதலே சிறந்த மந்திரம்

பிறரது குற்றத்தை ஆராய்ந்து கொண்டிருந்தால் உறவினர் என யாரும் இருக்கமாட்டார்கள்

பிறர் செய்த தீங்கினை மன்னித்து மறந்து விடுங்கள்

பணத்தை சேமிக்கும் முன் சிக்கனமாகச் செலவழிக்க பழகுங்கள்

பணத்தை தேடாமல், கையிருப்பை செலவழித்தால் விளைவு துன்பமே

நெருங்கிய நண்பனிடம் கூட வறுமையைப் பற்றி பேசாதீர்

மனம் ஒன்றிச் செய்யாத செயல்கள் வெற்றி பெறுவதில்லை

வேதம் ஓதுவதை விட ஒழுக்கமாக வாழ்வது சிறந்தது

உழைத்துச் சேர்த்த செல்வம் வீணாகாது. உற்சாகத்துடன் செயல்படுவதே முன்னேற்றத்திற்கு அழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!