Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 22 ஏப்ரல், 2021

Augmented reality போன்ற வசதியுடன் சலூன் கடையை திறக்க அமேசான் திட்டம்.! எங்கே தெரியுமா?

லண்டன் நகரின் பிரஷ்ஃபீல்ட்

அமேசான் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது.

 

அதேபோல் அமேசான் வலைத்தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த வலைத்தளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அருமையான ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் பிளிப்கார்ட், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது இந்த அமேசான் நிறுவனம்.

இந்நிலையில் அமேசான் நிறுவனம் லண்டனில் சலூன் கடையைத் திறக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே இதன் மூலம் முடித்திருத்தும் தொழிலிலும் அமேசான் நிறுவனம் கால்பதிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், லண்டன் நகரின் பிரஷ்ஃபீல்ட் எனும் தெருவில் சலூன் கடையை அமேசான் நிறுவனம் அமைக்கவுள்ளது. அதுவும் 1500 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களை கொண்டவகையில் பிரம்மாண்டமாக அமையவுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

அமேசான் நிறுவனம் இதற்குவேண்டி புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதாவது பயனர்கள் விரும்பும்படி துல்லியமாக முடிதிருத்தம் செய்ய ஆக்மென்டட் ரியாலிட்டி (augmented reality) போன்ற செயலி தொழில்நுட்பங்களையும் சலூன் கடையில் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பின்பு அழகுசாதன பொருட்கள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய மென்திரை இயங்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தேவையான பொருட்களை கியுஆர் கோடை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் வெளிவந்த தகவலின்படி, முதல்கட்டமாக அமேசானில் இருக்கும் ஊழியர்களுக்காக மட்டுமே அமேசான் சலூன் செயல்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அமேசான் நிறுவனம் இதேபோன்று பல்வேறு முயற்சிகளை இந்த ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதேபோல் இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது.மேலும் இந்தியாவில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவர உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக