Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!

 இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் தொடர்ந்து பல முதலீட்டு சேவைகளைத் தனது பேடிஎம் மனி வாயிலாக அளித்து வரும் நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும், இளம் டெக் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் விதமாக அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.

இந்திய ரீடைல் முதலீட்டாளர்களுக்காகவே பிரத்தியேகமாகப் பேடிஎம் நிறுவனம் தனது பேடிஎம் மனி தளத்தின் வாயிலாக மீரே அசட் NYSE FANG+ EFT உடன் கூட்டணி வைத்து அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.

அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பேஸ்புக், அமேசான், நெட்பிளிக்ஸ், கூகிள் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் அடங்கிய FANG+ பிரிவு நிறுவனங்கள் அடுத்த 10 வருடத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் எனக் கருதப்படும் நிலையில் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் இப்புதிய சேவையின் மூலம் முதலீட்டாளர்கள் ETF வாயிலாக FANG+ பேஸ்புக், அமேசான், நெட்பிளிக்ஸ், கூகிள், ஆப்பிள், அலிபாபா, பைய்டூ, நிவிடா, டெஸ்லா, டிவிட்டர் ஆகிய நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியும்.

கடந்த ஒரு வருடத்தில் NYSE FANG+ பிரிவு நிறுவனங்கள் மட்டும் சுமார் 102 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் குறிப்பாக டெஸ்லா 390 சதவீதமும், கூகிள் 80 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவில் ETF முதலீடுகள் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் கடந்த 3 வருடத்தில் சராசரியாக 40% CAGR வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் காரணத்தால் இந்திய ரீடைல் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இது இருக்கும் என நம்புகிறோம் எனப் பேடிஎம் மணி சீஇஓ வருண் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!