Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

ஜியோ உடன் போட்டிப்போட வால்மார்ட்-ன் மெகா திட்டம்..! கிளியர்டிர்ப் - பிளிப்கார்ட் டீல்..!

 பிளிப்கார்ட் - கிளியர்டிரிப்

கொரோனா தொற்றுக் காரணமாகச் சுற்றுலா மற்றும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சேவை அனைத்தும் மந்தமான வர்த்தகத்தைப் பெற்று வந்தாலும், கொரோனா பாதிப்புகள் அனைத்தும் தணிந்த பின்பு சுற்றுலாத் துறை மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெறும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்கா ரீடைல் விற்பனை நிறுவனமான வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் பிளிப்கார்ட் இந்திய வர்த்தகச் சந்தையில் ஏற்கனவே அமேசான் உடன் போட்டிப்போட்டு வரும் நிலையில் புதிதாக இப்பிரிவுக்குள் நுழைந்திருக்கும் ஜியோமார்ட், அடுத்த சில மாதங்களில் வரும் டாடா குழுமம் ஆகிய நிறுவனங்களுடன் போட்டிப்போடத் தயாராகி வருகிறது.

பிளிப்கார்ட் - கிளியர்டிரிப் 

இந்திய ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் விற்பனை சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பிளிப்கார்ட் நிறுவனம் அனைத்து ஆன்லைன் வர்த்தகச் சந்தையிலும் நுழைய வேண்டும் என்ற திட்டத்துடன் கடந்த சில வருடமாகத் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் டிராவல் அக்ரிகேட்டர் நிறுவனமான கிளியர்டிரிப்-ஐ கைப்பற்றியுள்ளது. 

40 மில்லியன் டாலர் மதிப்பீடு 

சுமார் 40 மில்லியன் டாலர் அளவிற்கு மதிப்பிடப்படும் கிளியர்டிரிப் நிறுவனத்தை எவ்வளவு தொகைக்குக் கைப்பற்றியுள்ளது என்ற தகவலை பிளிப்கார்ட் தெரிவிக்கவில்லை. இந்நிறுவன கைப்பற்றல் மூலம் பிளிப்கார்ட் அனைத்து விதமான பயண மற்றும் சற்றுலா சேவைகளை வழங்க முடியும். 

வேலைவாய்ப்புகளுக்குப் பாதிப்பு இல்லை 

மேலும் பிளிப்கார்ட் கைப்பற்றிய கிளியர்டிரிப் நிறுவனத்தைத் தனது நிறுவனத்தோடு சேர்க்காமல் தனி நிறுவனமாக வைக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் கிளியர்டிரிப் ஊழியர்கள் அனைவரும் பணியில் இருப்பார்கள் என்றும் வேலைவாய்ப்பை இழக்கும் சூழ்நிலைகள் இல்லை என்றும் பிளிப்கார்ட் மறைமுகமாகத் தெரிவித்துள்ளது 

100 மில்லியன் வாடிக்கையாளர்கள் 

கிளியர்டிரிப் தளத்தில் ஹோட்டல், விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் 80 முதல் 100 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களை இந்தக் கைப்பற்றல் மூலம் பெற உள்ளது. இதேவேளையில் பிளிப்கார்ட் தளத்தில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்குக் கிளியர்டிரிப் சேவையை எளிதாகப் பெற முடியும். இதன் மூலம் பிளிப்கார்ட் தளத்தில் இருக்கும் பழைய வாடிக்கையாளர்கள் வாயிலாகவே புதிய வர்த்தகத்தைப் பெற முடியும். 

சேவை மற்றும் விற்பனை வாடிக்கையாளர்கள் 

இந்தியாவில் தற்போது 500 முதல் 600 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வர்த்தகத் தளத்தில் உள்ளனர். இதில் 250 மில்லியன் வாடிக்கையாளர்கள் சேவைகளைப் பெறுபவர்கள், 150 வாடிக்கையாளர்கள் மட்டுமே ஆன்லைன் தளத்தில் பொருட்களை வாங்குவோர். இது மிகப்பெரிய வித்தியாசம் இந்த இடைவேளையைக் கைப்பற்ற பிளிப்கார்ட் நிறுவனத்திற்குக் கிளியர்டிரிப் பெரிய அளவில் உதவும். 

பிளிப்கார்ட்-க்கு நல்ல வாய்ப்பு 

கிளியர்டிரிப் தளத்தில் சேவைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது, இத்தளத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை. இதனால் கிளியர்டிரிப் தளத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களைப் பிளிப்கார்ட் தளத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும். 

மேக்மைடிரிப் - கிளியர்டிரிப் 

இந்தியாவில் சுற்றுலா பிரிவு வர்த்தகத்தில் மேக்மைடிரிப் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருப்பது கிளியர்டிரிப். கடந்த சில வருடத்தில் கிளியர்டிரிப் சுற்றுலா பிரிவில் மட்டும் அல்லாமல் ஹோட்டல், கேப்ஸ், ஹாலிடே பேக்கேஜ் ஆகியவற்றிலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!