Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 26 ஏப்ரல், 2021

இதில் கவனம் செலுத்தினால் முன்னேறிவிடலாம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

 ------------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

------------------------------------------------------

கஸ்டமர் : ஏம்ப்பா... காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கற?

வெய்டர் : நீங்கதான் சார்... 'கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.

கஸ்டமர் : 😐😐

------------------------------------------------------

முன்னேறிவிடலாம்... இப்படி செய்தால்...!!

------------------------------------------------------

பொதுவாக குறை கூறுபவர்கள்

நம் செயல், எண்ணம், திறமையின் மீது குறை கூறுவார்கள்...

இரண்டாவது நம் அதிர்ஷ்டத்தின் மீது...

மூன்றாவது வெளித்தோற்றத்தின் மீது...

அவர்களை விடுத்து, நம் செயல்களில் கவனம் செலுத்தினால் நாம் முன்னேறிவிடலாம்...

 ------------------------------------------------------

டிப்ஸ்... டிப்ஸ்...!!

------------------------------------------------------

 ஒரு சிறுகரண்டி வினிகரில் மூன்று கரண்டி தண்ணீரை கலந்து ஜன்னலை துடைத்தால் போதுமானது. ஜன்னல் பளிச்சிடும். துருக்கல் அண்டாது.

தேங்காய் சட்னி செய்யும் பொழுது புளிக்கு பதில் தக்காளிப் பழம் சேர்த்து அரைத்தால் சட்னி புதுவித சுவையுடன் இருக்கும்.

------------------------------------------------------

அறிந்து கொள்வோம்...!!

------------------------------------------------------

 1. பஜனை - கூட்டு வழிபாடு

 2. மத்தியானம் - நண்பகல்

 3. உத்தியோகம் - அலுவல்

 4. உபயம் - திருப்பணியாளர் கொடை

 5. எதார்த்தம் - இயல்பு

 6. ஐதீகம் - உலக வழக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக