Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 26 ஏப்ரல், 2021

முட்டாள்தனமான அறிவிப்பால் கிடைத்த 10 லட்சம் பரிசு... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------------

ஒரு குட்டிக்கதை...!!

---------------------------------------------------------

🐊 ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.

🐊 அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

🐊 அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான். அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான்.

🐊 வாயெல்லாம் பல்லாக தான் இருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான். 'இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா?"

🐊 மனைவி அமைதியாக சொன்னாள் 'அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்".😛😛


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக