
இறைவர்
திருப்பெயர்: நந்தி நாதேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: ஸ்ரீசௌந்தரநாயகி.
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
வழிபட்டோர் : கோரக்க சித்தர், நந்தி, மாகாளர்,
தேவாரப் பாடல்கள் :- - வைப்புத்தலம் - அப்பர்
கோரக்க
சித்தருக்கு இறைவன் காட்சி தந்த தலம்.
கோரக்க சித்தரின் ஜீவ சமாதி உள்ளது,
தமக்கெனத்
தனிப் பாடல்கள் பெறாது, பிற தலங்களுக்கு உரிய தேவாரப்பாடல்களில்
குறிப்பிடப்பட்டிருக்கும் கோவில்கள் அனைத்தும் தேவார வைப்புத் தலங்கள்" என
அழைக்கப்படுகின்றன.
சுமார் 301 வைப்புத்தலங்கள் உள்ளன. மக்கள் வழக்கில் வடக்குப் பொய்கை நல்லூர்
வைப்புத் தலமாகும்.
சித்தர்கள் பலரும் வழிபட்டு முக்திபெற்றதால் இத்தலம் 'சித்தாச்சிரம்' எனப்
போற்றப்படுகிறது.
கோரக்க சித்தருக்கு இறைவன் காட்சி தந்த தலம், கோரக்க சித்தரின் ஜீவ சமாதிக்
கோயிலில் சமாதிக்கு நித்திய வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பிரதோஷம் அன்று நந்தி தேவரை வணங்க வேண்டிய திருத்தலம் வடக்கு பொய்கை நல்லூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஆலயம்.
தல வரலாறு:
ஒருசமயம்
விசுவாமித்திர முனிவர் கைலாயத்தின் அந்தப்புரம் வரை சென்று இறைவனை சந்தித்து பல
வரங்களைப் பெற்று விடுகிறார்.சிவபெருமான் தனது ஞானதிருஷ்டியால் ஆராய்ந்தபோது
திருநந்திதேவர் காவல் பணியை சரியாக செய்யவில்லை என்று புரிந்து கொண்டார். உடனே
சிவபெருமான் நந்தி தேவருக்கு நீ பூலோகம் சென்று ஆயிரம் ஆண்டுகள் என்னை நோக்கி தவம்
செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.
நந்திதேவர் சிவபெருமானிடம் நான் பூலோகம் சென்று தங்களை நோக்கி தவம் செய்ய ஒரு
இடத்தை தாங்களே சொல்லுங்கள் என்று கேட்டார்,அதற்கு சிவபெருமான் காட்டிய இடம் தான்
வடக்கு பொய்கை நல்லூர்நந்தி நாதேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் இடம். எனவே பிரதோஷ
வழிபாடு செய்ய மிகச்சிறந்த சிவாலயம் வடக்கு பொய்கை நல்லூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஆலயம்
ஆகும்.
சிறப்புக்கள் :
பிரதோஷ வழிபாடு செய்ய மிகச்சிறந்த சிவாலயம் வடக்கு பொய்கை நல்லூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.
போன்: -
-
அமைவிடம்
மாநிலம் :
தமிழ் நாடு நாகப்பட்டிணம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈச்சங்குப்பம், அக்கரைப்பேட்டை
வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலையில் பொய்கைநல்லூர் உள்ளது. ஆலயம் வடக்கு
பொய்கைநல்லூர் பகுதியில் சாலை ஓரத்திலேயே உள்ளது. அருகில் கோரக்க சித்தர் கோவிலும்
உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக