Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 28 மே, 2021

முகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ்.. புதிதாக ஒரு நிறுவனத்தை கைப்பற்ற முடிவு..!

ஆனால் இந்தப் பயணத்தில் பிக் பேஸ்கட் உடனான ஒப்பந்தம் ஒரு தடையாக மாறினாலும் தொடர்ந்து தனது அதிரடி காட்டி வருகிறது ரிலையன்ஸ் ரீடைல்.

மளிகை பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடை, மருந்து பொருட்கள், தங்கம்/வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ், பர்னீச்சர் எனப் பல பிரிவுகளை அடுத்தடுத்து பல பிரிவுகளிலும் நாடு முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தற்போது பால் விற்பனை மற்றும் டெலிவரி புதிதாக ஒரு நிறுவனத்தைக் கைப்பற்ற உள்ளது ரிலையன்ஸ் ரீடைல்.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல் தனது ஆன்லைன் வர்த்தகச் சேவையை அடுத்தடுத்து வேகப்படுத்தி வரும் நிலையில் பால் விற்பனை மற்றும் டெலிவரி சேவை துறையில் இறங்க வேண்டும் என்பதற்காக மில்க்பேஸ்கட் என்னும் நிறுவனத்தைக் கைப்பற்ற உள்ளது.

ஹைப்பர்லோக்கல் வர்த்தகம்

பெரு நகரங்களில் மட்டுமே இயங்கும் மில்க்பேஸ்கட் நிறுவனத்தின் சேவையை ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றுவதன் மூலம் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய முடியும்.

களத்தில் இறங்கிய ரிலையன்ஸ்

குருகிராம்-ஐ தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல நகரங்களில் இயங்கும் மில்க்பேஸ்கட் நிறுவனம் தற்போது மிகவும் குறைவான லாபத்தில் இயங்கி வரும் காரணத்தால், நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவில் இறங்கியுள்ளது. இதன் வாயிலாக இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதற்காக ரிலையன்ஸ் களத்தில் இறங்கியுள்ளது.

பிக் பேஸ்கட், அமேசான் உடன் தோல்வி

மில்க்பேஸ்கட் ஏற்கனவே பிக் பேஸ்கட், அமேசான் போன்ற நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி அடைந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் ரீடைல் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மில்க்பேஸ்கட் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை இறுதியாக முடிவாகவில்லை என்றாலும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மில்க்பேஸ்கட் நிறுவனத்தின் மதிப்பு

மில்க்பேஸ்கட் ஏற்கனவே யூனிலீவர், ப்ளும் வென்ச்ர்ஸ், மேபீல்டு ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சுமார் 35 முதல் 40 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீட்டைப் பெற்றுத் தற்போது சுமார் 80 மில்லியன் டாலர் அளவிலான மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

பெரும் நிறுவனங்கள்

சில வருடங்களுக்கு முன்பு ஈகாமர்ஸ், ஆன்லைன் வர்த்தகம் என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் போட்டிப்போடும் தளமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பல பெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் இத்துறைக்குள் தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக டாடா, ரிலையன்ஸ், பிர்லா போன்றவை அடுத்தடுத்து நிறுவனங்களைக் கைப்பற்றி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!