மாலை வேளையில் சற்று வித்தியாசமான, அதே சமயம் ஆரோக்கியமான பானம் குடிக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கேரளாவின் மலபார் பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு மசாலா டீ உள்ளது. அதன் பெயர் சுலைமணி டீ.
இந்த சுலைமணி டீ அரபு பாரம்பரியத்திலிருந்து உருவானது என்று நம்பப்படுகிறது. இந்த டீயை மலபாரில் உள்ள மக்கள் பிரியாணி சாப்பிட்ட பிறகு குடிப்பார்கள். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. அதோடு உடலில் உள்ள கொழுப்புக்களையும் குறைக்க வல்லது.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 2 கப்
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1/4 இன்ச்
* ஏலக்காய் - 2
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* டீ தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - விருப்பமிருந்தால் சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் டீ தூள் சேர்த்து கிளறி, நிறம் மாறும் வரை கொதிக்கவிட்டு இறக்கி விட வேண்டும்.
* பிறகு அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி ஒரு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* இறுதியாக, அதை வடிகட்டினால், சுவையான சுலைமணி டீ தயார்.
குறிப்பு:
* இந்த டீ தயாரிக்கும் போது, இனிப்பு சுவைக்கு சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
* டீ தூள் சேர்க்க விருப்பமில்லாதவர்கள், அதைத் தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக