Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

ஞாயிறு, 30 மே, 2021

உங்க வங்கி டெபாசிட் பாதுகாப்பா இருக்கா..? குண்டை போட்ட ரிசர்வ் வங்கி.. மக்கள் அதிர்ச்சி..!

இந்தியாவில் வங்கிகள் அடுத்தடுத்து நிதி நெருக்கடியிலும், கடன் மோசடியிலும் சிக்கி வங்கியை மூடும் அளவிற்குச் சென்று வருகிறது.

இந்த மோசமான நிலையில் DICGC அமைப்பு மூலம் 5 லட்சம் ரூபாய் வரையிலான வைப்பு நிதிக்கு இன்சூரன்ஸ் கொடுக்கப்படும் காரணத்தால் மக்களின் பணத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் உள்ளது.

ஆனால் தற்போது பெரும் பிரச்சனை இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு உருவாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளின் நிதி நிலையை அறிந்து ரிசர்வ் வங்கி வைப்பு நிதிக்கான இன்சூரன்ஸ் தொயை 2020ஆம் ஆண்டுப் பிப்ரவரி 4ஆம் தேதி 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியது.

இதன் மூலம் வங்கி திவால் ஆனாலும் வைப்பு நிதியில் 5,00,000 ரூபாய் வரையில் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் கிடைக்கும்.

இந்திய வங்கி வைப்பு நிதி

ஆனால் தற்போது இந்திய வங்கிகளில் இருக்கும் மொத்த வைப்பு நிதியில் வெறும் 50.1 சதவீத தொகைக்கு மட்டுமே இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 49.4 சதவீத தொகை இன்சூரன்ஸ் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.

DICGC இன்சூரன்ஸ் பாதுகாப்பு

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மார்ச் 2021 நிலவரப் படி இந்திய வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் தொகையில் வெறும் 76,21,258 கோடி ரூபாய்க்கு மட்டுமே DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பற்ற 49.1% டெபாசிட்

இது இந்திய வங்கிகளில் இருக்கும் மொத்த 1,49,67,776 கோடி ரூபாய் வைப்பு நிதியியல் 50.9 சதவீதம் தொகை மட்டுமே, மீதமுள்ள 49.1 சதவீத டெபாசிட் தொகைக்கு DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.

வைப்பு நிதி கணக்குகள்

இதேபோல் இந்திய வங்கிகளில் இருக்கும் மொத்த 252.6 கோடி வைப்பு நிதி கணக்குகளில் 247.8 கோடி கணக்குகளுக்கு DICGC இன்சூரன்ஸ் பாதுகாப்பு உள்ளது. மீதமுள்ள 4.8 கோடி கணக்குகளில் இருக்கும் தொகை தான் தற்போது பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

ரிசர்வ் வங்கி தரவுகள்

மேலும் ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவல்கள் படி 2,058 வங்கிகளும், 1,919 கூட்டுறவு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பைப் பெற்றுள்ளது.

கூட்டுறவு வங்கிகள்

ஆனால் பல வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் இன்னும் வங்கி வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பை அளிக்காமல் உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

செக் செய்வது எப்படி..?

இந்நிலையில் நீங்கள் டெபாசிட் செய்துள்ள வங்கி DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பைப் பெற்றுள்ளதாக என்பதைத் தெரிந்துகொள்ளக் கீழே உள்ள இணைப்பைச் செய்யுங்கள். இந்த இணையப் பக்கத்தில் நீங்கள் டெபாசிட் செய்துள்ள வங்கியின் வகையைத் தேர்வு செய்து வங்கி பெயர் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!