Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 31 மே, 2021

தினம் ஒரு வாழைப்பழம், நன்மைகள் என்ன?

வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், பச்சைப்பழம், மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. எனவே இத்தகைய வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

* வாழைப்பழம் (Banana) பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது. 

தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும்.

* பழங்காலம் முதலே மலச்சிக்கலை குணப்படுத்தும் சிறந்த இயற்கை உணவாக வாழைப்பழம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தினமும் காலை மற்றும் மதிய வேளை உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து உணவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.

* கருவுற்றிருக்கும் பெண்கள் உடலில் சத்து தேவைகளை வாழைப்பழம் பூர்த்தி செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் மேற்கூறிய பிரச்சனைகளை போக்கலாம்.

* அல்சர் என்பது வயிறு மற்றும் குடல்களில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ஒரு புண் ஆகும். தினமும் காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, பின்பு காலை உணவை சாப்பிட்டு வந்தால் இந்த அல்சர் புண்கள் கூடிய விரைவில் குணமாகும். வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் செயல்பாடுகளையும் சீரமைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!