Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

ஞாயிறு, 30 மே, 2021

HDFC Bank : எச்.டி.எப்.சி வங்கிக்கு ரூ.10 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி உத்தரவு..


வங்கி ஒழுங்குமுறைச் சட்டங்களை மீறியதாக, எச்.டி.எப்.சி வங்கிக்கு 10 கோடி ரூபாயை அபராதமாக விதித்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி, எச்.டி.எப்.சி வங்கி மீதான அபராதம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், வங்கியின் வாகன கடன் இலாகாவில் முறைகேடுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் கிடைத்தன. 

விசாரணையில், சந்தைப்படுத்தல் மற்றும் மூன்றாம் தரப்பு நிதி சாராத பொருட்களை வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தல் ஆகியவற்றில், ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஒழுங்குமுறை சட்டங்களை மீறியதாகவும் கூறி எச்.டி.எப்.சி வங்கிக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வாகன கடன் வழங்குவதில் முறைகேடு என அடுத்தடுத்து புகார் வந்த நிலையில், விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி இல்லாத காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!