Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 2 ஜூன், 2021

அசத்தலான ஜியோனி எம்15 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

நைஜீரியாவில் ஜியோனி எம்15 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இப்போது ஜியோனி எம்15 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஜியோனி எம்15 

ஜியோனி எம்15 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல்
தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான
ஜியோனி எம்15 ஸ்மார்ட்போன் மாடல்.

ஜியோனி எம்15 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை
பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி90 சிப்செட் உடன் மாலி-ஜி76 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஜியோனி எம்15 ஸ்மார்ட்போன்.

இந்த ஜியோனி எம்15 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஜியோனி எம்15 ஸ்மார்ட்போனில் 5100 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள்ள அடக்கம்.

4ஜி எல்டிஇ, இரட்டை சிம் ஆதரவு, வைஃபை, புளூடூத் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்அடக்கம். மேலும் ஜியோனி எம்15 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.16,000-ஆக உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!