Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 5 ஜூன், 2021

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம்.





அமைவிடம் :

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில் பழமையானது மற்றும் பிரம்மாண்டமானது. மேலும் இக்கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகின்றது. தென் தமிழகத்தில் அமைந்துள்ள 87வது சிவாலயமாக இத்திருக்கோயில் விளங்குகிறது.

மாவட்டம் : 

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம்.

எப்படி செல்வது? 

தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதிகள் உள்ளது.

கோயில் சிறப்பு : 

ஆசியாவிலேயே மிக பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் தேர் தான். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கே ராஜா என்று பொருள்.

இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாளே ஆகும்.

சைவ சமயத்தின் பெரிய கோயில், பஞ்ச பூத தலங்களுள் பூமித்தலம், சப்தவிடத் தலங்களில் (வீதி விடங்கர்) மூலாதாரத் தலம், தோன்றிய காலமே அறிய முடியாத காலப் பழமை கொண்டது, பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரக் கூடிய பெருமையைக் கொண்டது, மெய்யெல்லாம் நீறு பூசி, பொய்யில்லாத்தன்மையில் தம்மை நேசிப்பவர்களுக்கு இந்த பிரபஞ்சத்தையே வழங்கக்கூடிய பெருமான் அருள்பாலிக்கும் தலமாகவும் விளங்குகிறது திருவாரூர் தியாகராஜர் கோயில்.


திருவாரூரில் நவகிரகங்கள் ஒரே நேர்க்கோட்டிலிருந்து இறைவனை வழிபடும் தலம். சர்வ தோஷ பரிகாரத் தலமான இங்கே பரிகார பூஜைகள் செய்வதால் நவகிரக பாதிப்புகள் குறையும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 'திருவாரூர் தேரழகு" என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றதாகும். 

கோயில் திருவிழா : 

மார்கழி திருவாதிரை, பங்குனி மாதம் ஆயில்யத்தில் தேரோட்டம், ஆடிப்பூரம் திருவிழா, மாசி மகத்தன்று சுந்தரருக்கு பூதகணம் நெல் கட்டி செல்லும் விழா, சித்திரை விழா, தெப்பத்திருவிழா, நிறைபணி விழா ஆகியவை இத்தலத்தின் சிறப்பான விழா நாட்கள் ஆகும். மாதாந்திர பிரதோஷம், வருடத்தின் சிறப்பு தினங்களின்போது கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.

வேண்டுதல் : 

பிரதான மூர்த்தியான தியாகராஜரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவேறுகிறது.

மூலவர் வான்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் அகலும். அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

நேர்த்திக்கடன் :

நினைத்த காரியம் நிறைவேற கடவுள்களுக்கெல்லாம் ராஜாவான தியாகராஜருக்கு விஷ்ணு பகவானும், முசுகுந்த சக்கரவர்த்தியும் செய்த முகுந்தார்ச்சனை செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக