Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 5 ஜூன், 2021

பகல் வட்டம் அகல் மழை... இதை சரியா சொல்லுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!! கலக்கலான காமெடிகள்...!!


நீதிபதி : நீ செய்த குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
குற்றவாளி : எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்?
நீதிபதி : 😳😳
------------------------------------------------
அருண் : டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு!
குமார் : கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?
அருண் : 😬😬
------------------------------------------------
வெற்றியா? தோல்வியா?
------------------------------------------------
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். 'தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?" என்று கேட்டார். பையன் 'தங்கம்" என்று சொன்னான்.

'பின் ஏன் ஊர்த் தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?" கோபத்துடன் கேட்டார் அறிஞர்.

'தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்து 'இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்" என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்..." அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!
------------------------------------------------
பழமொழியை வரிசைப்படுத்துங்கள்...! 
------------------------------------------------
⚡ அக்கரை பச்சை இக்கரை மாட்டுக்கு.

⚡ பகல் வட்டம் அகல் மழை.

⚡ ஆழ உழுகிறதை விட அகல உழு.

⚡ கொண்டதே கோலம் கண்டதே காட்சி.

விடை :

✔ இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

✔ அகல் வட்டம் பகல் மழை.

✔ அகல உழுகிறதை விட ஆழ உழு.

✔ கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக