இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் (RITES) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 22.4.2024 ஆகும்.
பணி
அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் மெக்கானிக்கல் 34, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் 28, சிவில் 8, ஐ.டி., கம்ப்யூட்டர் 2 என மொத்தம் 72 இடங்கள் உள்ளன.
கல்வி
தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது
22.4.2024 அடிப்படையில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 600. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 300
மேலும் விவரங்கள்
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய rites.com என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
வேலைவாய்ப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக