🔆 திதி : இரவு 08.35 வரை தசமி பின்பு ஏகாதசி.
🔆 நட்சத்திரம் : காலை 10.55 வரை ஆயில்யம் பின்பு மகம்.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 10.55 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 கேட்டை, மூலம்
பண்டிகை
🌷 சங்கரன்கோவில் ஸ்ரீசிவபெருமான் வெள்ளி சப்பரத்திலும், அம்பாள் வெள்ளி சப்பரத்திலும் பவனி வரும் காட்சி.
வழிபாடு
🙏 குருமார்களை வழிபட சுபம் ஏற்படும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 புதிய உபகரணங்களை வாங்க நல்ல நாள்.
🌟 விதை விதைக்க நல்ல நாள்.
🌟 பசு வாங்குவதற்கு உகந்த நாள்.
🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு சிறந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 05.55 AM முதல் 07.43 AM வரை
ரிஷப லக்னம் 07.44 AM முதல் 09.46 AM வரை
மிதுன லக்னம் 09.47 AM முதல் 11.57 AM வரை
கடக லக்னம் 11.58 AM முதல் 02.05 PM வரை
சிம்ம லக்னம் 02.06 PM முதல் 04.07 PM வரை
கன்னி லக்னம் 04.08 PM முதல் 06.08 PM வரை
துலாம் லக்னம் 06.09 PM முதல் 08.13 PM வரை
விருச்சிக லக்னம் 08.14 PM முதல் 10.24 PM வரை
தனுசு லக்னம் 10.25 PM முதல் 12.32 AM வரை
மகர லக்னம் 12.33 AM முதல் 02.26 AM வரை
கும்ப லக்னம் 02.27 AM முதல் 04.09 AM வரை
மீன லக்னம் 04.10 AM முதல் 05.50 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
புதிய செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மனதளவில் புதிய இலக்குகள் பிறக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : செலவுகளை குறைப்பீர்கள்.
பரணி : ஆதாயம் ஏற்படும்.
கிருத்திகை : இலக்குகள் பிறக்கும்.
---------------------------------------
ரிஷபம்
சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதையும் சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் சுபகாரியங்கள் கைகூடிவரும். புதிய பங்குதாரர்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். உழைப்புக்குண்டான மதிப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : முடிவு கிடைக்கும்.
ரோகிணி : மனப்பக்குவம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : மதிப்பு கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
பேச்சுத்திறமையின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வியூகங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : அனுகூலம் ஏற்படும்.
திருவாதிரை : பொறுமை வேண்டும்.
புனர்பூசம் : மதிப்பு மேம்படும்.
---------------------------------------
கடகம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். சில அனுபவங்களின் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : அத்தியாயம் பிறக்கும்.
---------------------------------------
சிம்மம்
உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். சில நினைவுகளால் மனதில் ஒருவிதமான இறுக்கங்கள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். மறைமுகமான சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : பொறுப்பு மேம்படும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : நெருக்கடிகள் நீங்கும்.
---------------------------------------
கன்னி
எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின் நிறைவேறும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மத்தியமாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : அலைச்சல் உண்டாகும்.
அஸ்தம் : மத்தியமான நாள்.
சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
துலாம்
மனதில் முன்னேற்றத்திற்கான சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும். பணிபுரியும் இடத்தில் திறமைகள் வெளிப்படும். வெற்றி பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : அனுகூலம் ஏற்படும்.
சுவாதி : புரிதல் அதிகரிக்கும்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
விருச்சிகம்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை தரும். வருவாய் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : சுறுசுறுப்பான நாள்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : திருப்தியான நாள்.
---------------------------------------
தனுசு
பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் விலகும். எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செயல்படுவதன் மூலம் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பணி நிமிர்த்தமான சில ஆலோசனைகள் கிடைக்கும். தர்ம காரியங்களின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : சோர்வுகள் விலகும்.
பூராடம் : மதிப்பு உயரும்.
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்களை பகிராமல் இருப்பது நல்லது. நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் காலதாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் நன்மை உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : காலதாமதம் ஏற்படும்.
அவிட்டம் : நன்மை உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வேலையாட்கள் இடத்தில் மதிப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சக ஊழியர்களின் ஆதரவால் திட்டமிட்ட காரியங்கள் நிறைவுபெறும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
சதயம் : மதிப்பு மேம்படும்.
பூரட்டாதி : தன்னம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------
மீனம்
தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு தொடர்பான காரியத்தில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். வித்தியாசமான செயல்பாடுகளால் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : தாமதங்கள் விலகும்.
உத்திரட்டாதி : தீர்ப்பு கிடைக்கும்.
ரேவதி : வாய்ப்புகள் ஏற்படும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக