உலகுக்கே வெப்பத்தை வழங்கும் அக்னி தேவனுக்கே இழந்த சக்தியை மீண்டும் கொடுத்த தலம் என்பதால் இங்கிருக்கும் இறைவன் அக்னிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 125 வது தேவாரத்தலம் ஆகும்.
மாவட்டம் :
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர், திருவாரூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
கும்பகோணம்-காரைக்கால் சாலையில் எஸ்.புதூர் வந்து அங்கிருந்து தெற்கில் திரும்பி வடமட்டம் சென்று அதே பாதையில் மேலும் சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து அன்னியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது.
கோயில் சிறப்பு :
இங்கு அமைந்துள்ள பஞ்சமூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி திருமேனிகள் மிக அழகாக காட்சியளிக்கின்றனர்.
அக்னி பகவானுக்குச் சாபம் நீங்கிய தலமாகவும், அக்னிக்கு மேல் நோக்கிச் செல்லக்கூடிய ஆற்றலைக் கொடுத்த தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.
பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப் பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது.
கோயில் திருவிழா :
வைகாசி விசாகம், மாசி மகம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல் :
திருமணத்தில் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து, திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.
கட்டிடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால் 7 செங்கல் கொண்டு வந்து இங்கு வைத்து வழிபட்டு தொடங்கினால் தடையின்றி கட்டலாம் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன் :
வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருட்களை நைவேத்தியம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக