சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
வந்தவர் : சர்வர், இந்த மோசமான சாப்பாட்டை யார் சாப்பிடுவா? கூப்பிடு உங்க மேனேஜரை...
சர்வர் : அவரும் சாப்பிட மாட்டார் சார்!
வந்தவர் : 😖😖
-------------------------------------
முட்டாள் பணக்காரர்...!!
-------------------------------------
ஒரு ஊரில் முட்டாள் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். தன் வேலைக்காரனை எப்பொழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரது வழக்கம். ஒரு நாள் தன் வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணெயை வாங்கி வரச் சொன்னார்.
வேலைக்காரனும் கடைவீதிக்குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான். வேர்த்து விறுவிறுத்து வீட்டிற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர், ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய்? என்று கேட்டு, எண்ணெய் டின்னை பார்த்தார்.
எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. ஏன்? என்று கேட்டார். அதற்கு வேலைக்காரன், டின் அடியில் ஓட்டை இருந்தது அதனால் கீழே வழிந்து விட்டது என்று கூறினான்.
அதற்கு பணக்காரர், கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது என்று கத்தினார்...😳😰
-------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
பொருள் :
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப் போன்றது.
-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
ஆட்டிற்கு பிடித்த திசை எது?
.
.
.
.
.
மேற்கு
அடிக்கடி கோபம் வருபவர்கள் எந்தக் காயை சாப்பிட வேண்டும்?
.
.
.
.
.
கருணைக் கிழங்கு
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக