
அமைவிடம் :
திருப்பரங்குன்றம் இயற்கை எழில் சூழ்ந்துள்ள அழகுமிக்க சிற்றூரில் மலையின் அடிவாரத்தில், ஊரின் நடுவே குன்றே கோயிலாக எழுந்துள்ள எழில்மிகு திருக்கோயிலே அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அழைக்கப்படுகிறது.
மாவட்டம் :
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்.
எப்படி செல்வது?
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு நகரப் பேருந்துகள் அதிக அளவில் செல்கிறது. மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம்.
கோயில் சிறப்பு :
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன.
இக்குன்றானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது.
இத்தலம் பாண்டிய நாட்டு 14 சைவத் திருத்தலங்களுள் முக்கியமானதாக விளங்குகிறது.
இத்தலம் சிவபெருமான், முருகப்பெருமான் ஆகிய 2 திருத்தலங்களையும் ஒருங்கே பெற்றிருப்பது தனிச்சிறப்பு.
குலத்தை காக்கும் குலதெய்வத்தை மறவாதீர்கள்..
திருப்பரங்குன்றம் முருகன் குடைவரைக் கோயிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாற்றப்படுகிறது. அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே.
இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாகவே மேலே செல்ல வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு இயலாது.
நக்கீரர், முருகன் மீது திருமுருகாற்றுப்படையைப் பாடியது இத்தலத்தில்தான்.
முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோயில் திருவிழா :
வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
வேண்டுதல்கள் :
திருமண, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். இராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன் :
இக்கோயிலில் அதிகளவில் அன்னதானம் செய்து நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
பிரசாதம் :
அபிஷேகம் செய்த பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
அருள்தரும் ஆலயங்கள்

ஓம் MURUGA ANAM
பதிலளிநீக்கு