எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மீறி வந்த இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது.
சிறிய அளவிலான இந்திய உளவு விமானம் ஒன்று சங்க் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வந்து பாகிஸ்தானில் அத்துமீறி நுழைந்து உளவு பார்ப்பதற்காகவும் அதனால் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் கூறுகையில் , இந்திய ராணுவத்தின் இதுபோன்ற தேவையற்ற செயல்கள் இருநாட்டு வான்வழி ஒப்பந்தத்தையும் மீறிய செயலாகும். கடந்த 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் அவமரியாதை செய்வதை இந்த ஊடுருவல் உணர்த்துகிறது என கூறியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக