இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்றைய சூழலில் குழந்தைகளின் பொழுதுபோக்குகளாக தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோகேம் விளையாடுவது, அலைபேசியில் சேட்டிங் செய்வது என்று நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கின்றனர்.
குழந்தைகள் வெளியே சென்று எல்லா குழந்தைகளோடு விளையாடும்போது அவர்கள் உற்சாகமாக விளையாடுவார்கள். மேலும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வார்கள்.
ஆனால், குழந்தைகள் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகளை விட ஓடி, ஆடி விளையாடும் விளையாட்டுகளைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள்.
குழந்தைகள் விளையாடுவதற்கு சரியான நேரமும், சூழலும் அமைந்துவிட்டால் அவர்கள் மிகவும் உற்சாகம் அடைந்து விடுவார்கள்.
அவ்வாறு குழந்தைகள் உற்சாகமாக அங்கும் இங்கும் ஓடித்திரிந்து விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் குரங்கு பந்தாட்டம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பு முதல் போட்டியாளரை தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தேர்வு செய்த முதல் போட்டியாளர் நடுவில் நிற்க வேண்டும். விளையாட்டில் பங்கேற்கும் மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் முதல் போட்டியாளரை சுற்றி பெரிய வட்டமாக நின்றுக் கொள்ள வேண்டும்.
சுற்றி நிற்கும் போட்டியாளர்களில் யாராவது ஒருவரின் கையில் பந்து ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த போட்டியாளர் அவர் கையில் உள்ள பந்தை நின்ற இடத்திலிருந்தே வட்டத்தில் அவருக்கு எதிரே நிற்பவர் மீது தூக்கி வீச வேண்டும்.
அவ்வாறு பந்தை வீசும்போது நடுவில் இருக்கும் முதல் போட்டியாளர் அந்த பந்தை பிடித்தாலோ அல்லது தொட்டாலோ பந்தை வீசிய நபர் 'அவுட்" ஆகிவிடுவார்.
பிறகு அவுட் ஆகிய போட்டியாளர் நடுவில் நின்று கொள்ள வேண்டும். நடுவில் நின்ற முதல் போட்டியாளர் அவுட் ஆனவர் இடத்தில் நின்றுக் கொள்ள வேண்டும். இதே மாதிரி தொடந்து இந்த விளையாட்டை விளையாட வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் இந்த விளையாட்டை விளையாடும்போது நடுவில் நிற்கும் போட்டியாளர் எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளலாம்.
ஒருவர் நிற்பதற்கு பதிலாக இருவர் அல்லது மூவர் வட்டத்தின் நடுவே நின்றுக் கொண்டு குறுக்கே வீசப்படும் பந்தை தடுக்க செய்யலாம்.
பந்தை குறுக்கில் வீசும்போதும், அதை நடுவிலுள்ள போட்டியாளர் பிடிப்பதற்கு முயற்சிக்கும்போதும் சுற்றியுள்ள மீதமுள்ள போட்டியாளர்கள் அவர்களை உற்சாகம் செய்வதற்கு கைகளை தட்டலாம்.
பலன்கள் :
கைகள் வலுப்பெறும்.
எச்சரிக்கை திறன் மேம்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக