இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மரங்கள் என்றாலே உயரமாக வளர்வது என்பது அனைவருக்கும் தெரியும்... ஆனால், வளைந்து வளரும் மரங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?ஆமாங்க... ஆராய்ச்சியாளர்களுக்கே ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் தொண்ணூறு பாகை அளவில் வளைந்து வளர்ந்துள்ள மரங்கள் அடங்கிய காடு ஒன்றுள்ளது.
அப்படியொரு அதிசய காட்டைப் பற்றி தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.
போலந்து நாட்டின் மேற்கே அமைந்துள்ளது விசித்திர வடிவிலான ஒரு பைன் மரக்காடு. இந்த காட்டை பார்க்கும் அனைவருக்கும் இங்குள்ள மரங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில், இந்த காட்டின் மரங்கள் யாவும் அடிப்பகுதியில் ஏறத்தாழ ஒரே வகையாக வளைந்து காணப்படுகின்றன.
போலந்து என்னும் நாடு உருவாவதற்கு முன்னர், அதாவது ஜெர்மானிய மாகாணமான போமேரேனியாவில் இருந்தபோது இம்மரங்கள் நடப்பட்டது என்று கூறுகின்றனர்.
மேலும், அங்கு நடப்பட்ட இந்த மரங்கள் விஞ்ஞானிகளே வியக்கும் வண்ணம், அடிப்பகுதியில் ஏறத்தாழ தொண்ணூறு பாகை அளவில் வளைந்து பின் நீண்டு வளர்கின்றன.
ஒவ்வொரு பைன் மரமும் வடக்கிற்கும் மேலாக மேலே தரையில் வளைந்து, பின்னர் மூன்று முதல் ஒன்பது அடி பக்கவாட்டாக சென்று, மீண்டும் வளைந்து நீண்டு வளர்கிறது.
இன்றும் புரியாத புதிராய் இருக்கும் இந்த காடு தற்போது கோணல் மர காடு என அழைக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக