இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மதுரை நகரத்தின் அடையாளங்களில் ஒன்று காந்தி அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகம் வைகை ஆற்றின் தென்பகுதியில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் வரலாற்றுப் பெட்டகமாக திகழ்கிறது.
1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு இந்திய மக்களின் ஆதரவிலும், நிதியுதவியினாலும் காந்தியின் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளையினால் எழுப்பப்பட்டது.
இந்த அருங்காட்சியகம் ஏப்ரல் 15, 1959ல் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவில்லம் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கின்றது. இராணி மங்கம்மாள் அரண்மனை இந்த அருங்காட்சியக அமைவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நினைவில்லம் நிறுவப்பட்டது.
சிறப்புகள் :
இந்தியாவில் உள்ள ஐந்து காந்தி அருங்காட்சியகங்களில் இந்த மதுரை காந்தி அருங்காட்சியகமும் ஒன்று என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
பிரதான கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து வெளியே செல்ல ரகசிய சுரங்கப்பாதை உள்ளது.
இந்திய தேசிய விடுதலை போராட்டத்தினை விளக்கும் விதமான 265 ஒளியுணர் விளக்க நிழற்படங்கள் உள்ளன.
காந்தியின் அரிய புகைப்படங்கள், அவர் அணிந்த மூக்குக்கண்ணாடி, நூல் நூற்ற ராட்டை, காலணி, தலையணை, கம்பளி என ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தின் முதல் மேல் தளத்தில் உள்ள காட்சிக்கூடத்தில் காந்தியடிகள் சுடப்பட்ட போது அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த மேல்துண்டு இங்கு காற்றுபுகா கண்ணாடி பேழைக்குள் அடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
காந்தியடிகள் எழுதிய கடிதங்கள், அவர் தமிழில் கையெழுத்திட்டு எழுதிய கடிதம் மற்றும் தேசிய, உலக தலைவர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன.
காந்தி அருங்காட்சியகத்தில் பலரையும் கவரும் அம்சமாக அஸ்தி, இங்குள்ள அமைதிப் பீடத்தில் வைத்து காக்கப்பட்டு வருகிறது. இதைக்கண்டு பலரும் மெய்சிலிர்த்து வணங்கிச் செல்கின்றனர்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சர்வசமய பிரார்த்தனை இங்கு நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இங்கு ஹிந்தி, சமஸ்கிருதப் பயிற்சி, யோகா பயிற்சி மற்றும் கைத்திறன் தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
காந்தி குடில் மாதிரி தற்போது நவீன காலத்துக்கேற்ப கட்டிடமாக மாற்றப்பட்டுள்ளது.
எப்படி செல்வது?
மதுரையிலிருந்து 2.9கி.மீ. தொலைவில் காந்தி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. பல நகரங்களிலிருந்தும் பேருந்துகள் மதுரைக்கு இயக்கப்படுகிறது.
எப்போது செல்வது?
வருடம் முழுவதும் செல்லலாம்.
அருகில் உள்ள ரயில் நிலையம் :
மதுரை ரயில்வே சந்திப்பு, மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையமாக விளங்குகிறது.
அருகில் உள்ள விமான நிலையம் :
மதுரை விமான நிலையம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக