இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும் ஒரு அதிசயம் இருக்கும். ஆனால் அவை நமக்கு தெரியமாலிருக்கும். அப்படி நமக்கு தெரியாத நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு கோவில் தான் அருள்மிகு ரிஷபேஸ்வரர் கோவில்.....!!
இக்கோவில் எழில்மிகு அழகுடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் அமைந்துள்ளது.
ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமை வாய்ந்த ஆலயமாகும்.
இந்த கோயிலில் மூலவருடன், தட்சணாமூர்த்தி, பாலமுருகன், நவகிரகம் மற்றும் கோயில் வளாகத்தில் மிக பெரிய நந்தி உள்ளது.
கோவில் ராஜகோபுரத்தை கடந்து, நந்தீஸ்வரர் மீது, சூரிய ஒளிக்கதிர்கள் பட்ட, சிறிது நேரத்தில் தங்க நிறமாக, நந்தீஸ்வரர் காட்சியளிப்பார்.
ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாதம், 3ம் தேதியன்று, சூரிய ஒளியானது, கோவிலின் ராஜகோபுரம் மீது பட்டு, பின், நந்தீஸ்வரர் மீது விழுகிறது. அந்த நேரம் நந்தீஸ்வரர் தங்க நிறமாக ஒளிர்கிறார்.
தங்க நிறத்தில் ஒளிரும் நந்தி பகவான் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக