Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

பஸ்சிமோத்தனாசனம்

  Image result for பஸ்சிமோத்தாசனம்

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பெண்களுக்கு மிகச் சிறந்த பலன்களை தரக்கூடிய ஆசனமாக நிகழக்கூடியது பஸ்சிமோத்தனாசனம்.

செய்முறை:
  • முதலில் இரண்டு கால்களையும் முன்பக்கமாக நீட்டி நேராக நிமிர்ந்து உட்காரவும். கால்களுக்கு இடையில் இடைவெளி இல்லாமல் அருகருகில் இருக்க வேண்டும்.
  • அடுத்து, மூச்சை நன்றாக இழுத்தபடி, இரு கைகளையும் பக்கவாட்டில் இருந்து தூக்கி தலைக்கு மேல் கொண்டு செல்ல வேண்டும்.
  • பின் , மூச்சை வெளிவிட்டபடி உடலை முன்னோக்கி வளைத்து இரு கைகளாலும் கால் பாதங்களை பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
  • நெற்றியால் முழங்கால் மூட்டை தொட முயற்சி செய்ய வேண்டும்.
  • இப்பொழுது கால்கள் வளையக்கூடாது. முழங்கால்களை தூக்கக்கூடாது.
  • கால் கட்டை விரல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து மேல்நோக்கி இருக்க வேண்டும்.
  • சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும்.
  • இதே நிலையில் சுமார் 30 நிமிடங்களாவது இருக்க வேண்டும். பின் மெதுவாக இயல்பான நிலைக்கு வர வேண்டும்.
பலன்கள்:
  • நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த ஆசனம்.
  • முதுகுத்தண்டு நன்கு நீட்டப்படுவதால் சிறந்த பயிற்சி கிடைக்கிறது.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
  • தொடை மற்றும் கால் தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது.
  • இடுப்பு வலியால் அவதிப்படுவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது.
  • மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
  • பெண்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வர மாதவிலக்கின் பொழுது ஏற்படும் வலிக்கு தீர்வு கிடைக்கும்.
  • வயிற்று பகுதிக்கு நல்ல அழுத்தம் கிடைப்பதால் உள்ளுறுப்புகள் சீராக இயங்குவதுடன் வயிற்றில் கொழுப்பு சேருவதையும் தடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக