Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 8 ஜூன், 2021

கோதுமை மாவுக்குச் செம டிமாண்ட்.. களத்தில் இறக்கும் பார்லே..!

கோதுமை மாவுக்குச் செம டிமாண்ட்.. களத்தில் இறக்கும் பார்லே..!

பிஸ்கேட், சாக்லேட், ஸ்னாக்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக விளங்கும் பார்லேஜி நிறுவனம் எப்எம்சிஜி துறையில் முக்கிய விற்பனை பொருளாக விளங்கும் கோதுமை மாவு விற்பனையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

பார்லே நிறுவனம் தனது பிரபலமான பிராண்டாக விளங்கும் பார்லே ஜி பெயரிலேயே கோதுமை மாவு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது இதன் படி பார்லே ஜி சக்கி ஆட்டா எனப் பெயரில் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.

தற்போது பார்லே நிறுவனத்தின் பார்லே ஜி சக்கி ஆட்டா மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் விற்பனை செய்யப்படவும் விநியோகமும் துவங்கியுள்ள நிலையில் விரைவில் இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காலத்தில் நாடு முழுவதும் பிராண்ட் கோதுமை மாவு விற்பனை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் இதற்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன் வாயிலாகவே தற்போது பார்லே நிறுவனம் பல முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே ஆதிக்கம் செய்யும் நிலையிலும் இத்துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.

தற்போது பார்லே நிறுவனம் 2 கிலோ, 5 கிலோ, 10 கிலோ பாக்கெட்களில் கோதுமை மாவும் சக போட்டி நிறுவனங்களை விடவும் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!