Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 5 ஜூன், 2021

தீபாவளிக்கு இருக்கு ஜியோவின் பெரிய பரிசு: முகேஷ் அம்பானியின் பலே திட்டம்.!

மேலும் கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ஸ்மார்ட்போன் ஆனது 50 டாலருக்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது 50 டாலர் என்றால் இந்திய ரூபாயின் மதிப்பில் 3600 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் தயாரிப்புப் பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் இதற்கானமுன்பதிவு சேவை துவங்கும் என்று ஆன்லைனில் தகவல் வெளிவந்துள்ளது.

அதேபோல் இந்தியாவில் தீபாவளி பண்டிகையில் போது இந்த மலிவு விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தால் சிறப்பானவர்த்தகத்தை பெற முடியம் என்று கவுன்டர்பாயின்ட் ரீசர்ச் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனங்களின் மலிவு விலைஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான ஏஜிஎம் பொது நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் 44-வது ஆண்டு பொது கூட்டமாகும். இது ஜூன் மாதம் 24 ஆம் தேதி 2 மணிக்கு நடைபெற தொடங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வருடாந்திர பொது கூட்டம் வரும் வேளையில் இந்த மலிவு விலை ஸ்மார்ட்போனைப் பற்றிய முக்கியத் தகவல்களை பெறமுடியும்.

குறிப்பாக ரிலையன்ஸ் ஏஜிஎம் பொது நிகழ்வு யூடியூப் மூலமாக நேரடி ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ஏஜிஎம் நிகழ்வில் 5ஜி தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் ரிலையன்ஸ் இந்த ஏஜிஎம் நிகழ்வில் குறைந்த விலை போன், பட்ஜெட் விலை ஜியோ லேப்டாப் ஆக ஜியோ புக்,இந்தியாவில் 5ஜி சேவை எப்போது அறிமுகம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோபுக் லேப்டாப் குறித்த தகவல் ஒரு புகைப்படத்துடன் லீக் ஆனது. மேலும் இந்த ஜியோ லேப்டாப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

ஜியோ லேப்டாப் மாடல் 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே வடிமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஜியோ லேப்டாப் மாடல் வெளிவரும். ஜியோபுதிய லேப்டாப் சாதனம் JioOS என அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட இயங்குதள கட்டமைப்பைக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக