Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 8 ஜூன், 2021

திரைப்படங்களை பார்த்தால் கடுமையான தண்டனை? சட்டம் பிறப்பித்த கிம் அரசு.!

உலக நாடுகளின் மத்தியில் நன்பெயரைஇப்போது வந்துள்ள புதிய புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உலகில் அனைத்து மக்களும் அனைத்து திரைப்படங்களையும் மிக எளிமையாக பார்க்க முடிகிறது. குறிப்பாக மக்களின் பிரபலமான பொழுதுபோக்குகளில் ஒன்று திரைப்படம் காண்பது தான். ஆனால் வடகொரியாவில் திரைப்படம் பார்ப்பதற்கு கடுமையான தண்டைனை கிடைக்கும் என்பதை நம்பமுடிகிறதா?

அதாவது உலக நாடுகளின் மத்தியில் நன்பெயரை வாங்கி கொண்டு வந்த வட கொரியாவும், அந்நாட்டின் "சர்வாதிகாரியான" கிம்மும்
மீண்டும் அதன் பழைய போக்கிற்கு திரும்பி உள்ளனர் என்றுதான் கூறவேண்டும்.

அதன்படி வடகொரியா அரசு என்ன நினைக்கிறதோ அதை மட்டும்தான் மக்கள் செயல்படுத்த வேண்டும். இல்லையேல் நினைத்துப் பார்க்க முடியாத தண்டனைகள் கிடைக்கும். அண்மையில் திரைப்படங்களை விற்பனை செய்த ஒரு வடகொரிய இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

வெளிவந்த தகவலனில்படி, தென்கொரிய திரைப்படங்கள் அடங்கிய வீடியோக்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு இளைஞருக்கு 500 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளின் தொடர்பு இல்லாமலேயே வாழும் வடகொரியா மக்கள் அவ்வப்போது சீனா எல்லை வழியே கடத்தி வரப்படும் சிடிக்கள் மூலமாக வெளிநாட்டு திரைப்படங்களை கண்டு ரசித்து வந்ததாக கூறப்படுகிறது.

எனவே இதுபோன்ற வெளிநாட்டு திரைப்படங்களை காண்பதால் மக்களிடம் அதன் தாக்கம் அதிகரித்து அரசுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறது கிம் ஜாங் உன் அரசு. எனவேதான் வெளிநாட்டு படங்களை விற்பவர்கள், பரப்புபவர்கள், காண்பவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டுவந்துள்ளது வடகொரியா.

மேலும் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகளை சேர்ந்த திரைப்படங்களின் வீடியோக்களை கடத்தி வருவோருக்கு மரண
தண்டனை என்றும், வெளிநாட்டு படங்களை காண்போருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும் சட்டம் கொண்டுவந்துள்ளது
கிம் ஜாங் உன் அரசு.

அதன்படி இந்த சட்டத்தின் அடிப்படையில் தான் லீ என்ற இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது வடகொரிய அரசு. இதில் தெளிவாக இருப்பது என்னவென்றால், மக்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது அந்நாடு.

அதேபோல் வெளிநாட்டு மொழி பேசுவோர், வெளிநாட்டவரை போல சிகை அலங்காரம் வைத்திருப்போர், வெளிநாட்டு ஆடைகளை அணிவோர் சமூக விஷமிகள் என்று குறிப்பிட்டுள்ளார் கிம். மேலும் கொரோனா பாதிப்பு வந்துவிடுமோ என்று நினைத்து சீனாவுடனான எல்லையையும் வடகொரிய அரசு மூடிவிட்டது. இதனால் வடகொரிய மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!