-------------------------------------
ஓடிப்போன குரங்கு...!!
-------------------------------------
🐒 மூன்று நண்பர்கள் சாப்ட்வேர் கம்பனியில் வேலை செய்றவங்க... ஒருநாள் ஒரு ஜூவுல மீட் பண்ணாங்க, மூணு பேரும் க்ளாஸ் மேட்ஸ்... அப்ப ஒருத்தன் நம்மள்ல யாரு பெஸ்ட்னு ஒரு சின்ன போட்டி வெச்சுப் பாக்கலாம்-னு சொன்னான். மூணு பேரும் அங்க இருந்த ஒரு குரங்க சிரிக்க வெக்கிறதுன்னு முடிவாச்சு.
🐒 முதல் ஆள் அவன் கம்பெனி கலாச்சாரமான பேசியே சரிக்கட்டுற டெக்னிக்க ஃபாலோ பண்ணி ஜோக் சொன்னான்... குரங்கு அசையவே இல்ல...
🐒 இரண்டாம் ஆள்... அவங்க ப்ராக்டிக்கல் ஓரியண்டட் கோமாளி; மாதிரி சேட்டை பண்ணி காட்டினான். சைகை காட்டினான். ம்ஹூம்.. குரங்கு கொஞ்சம் கூட ரியாக்சன் காட்டல.
🐒 மூன்றாம் ஆள்... குரங்கு பக்கத்துல போய் காதுல என்னமோ சொன்னான். உடனே குரங்கு பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிருச்சு.
🐒 மத்த ரெண்டு பேருக்கும் ஆச்சர்யம், இருந்தாலும் தோல்விய ஒத்துக்காம, சரி இன்னொரு ரவுண்டு வெச்சுக்கலாம். பட் இந்த வாட்டி குரங்கை அழ வைக்கணும் அப்படின்னாங்க.
🐒 மறுபடியும் முதல் ஆள் வந்து சோகமான உருக்கமான விஷயங்களா சொன்னான். குரங்கு கண்டுக்கவே இல்லை.
🐒 இரண்டாம் ஆள் அழுகுற மாதிரி ஆக்ட் பண்ணி காட்டினான். அதையும் குரங்கு சட்டை பண்ணல.
🐒 மூன்றாம் ஆள், வந்து மறுபடியும் குரங்கு காதுல போய் என்னமோ சொன்னான். உடனே குரங்கு ஓன்னு அழ ஆரம்பிச்சிடுச்சு.
🐒 ரெண்டு பேருக்கும் அதிர்ச்சியா போச்சு, இதையும் ஒத்துக்காம இன்னொரு டெஸ்ட் வைக்கணும்னு முடிவு பண்ணாங்க. இந்த வாட்டி குரங்கை ஓட வைக்கணும்னு சொல்லிட்டாங்க.
🐒 வழக்கம் போல முதல் ஆள் வந்தான். குரங்க பார்த்து குரைச்சான். பயமுறுத்துனான். எந்திரிச்சி ஓடுன்னு கெஞ்சிப்பாத்தான். வழக்கம் போல குரங்குபாட்டுக்கு பேசாம உக்காந்திருச்சு.
🐒 இரண்டாவது ஆள் வந்து குரங்கை புடிச்சி தள்ளிவிட்டான். வெரட்டி பார்த்தான். குரங்கு அசரவே இல்ல.
🐒 மூன்றாம் ஆள் இந்தவாட்டியும் குரங்கு காதுல போய் என்னமோ சொன்னான். அதைக் கேட்டதும் உடனே குரங்கு தலைதெறிக்க ஓடி போயிருச்சு...
🐒 கடைசியா வேறவழியில்லாம ரெண்டு பேரும் தோல்விய ஒத்துக்கிட்டாங்க. மூன்றாம் ஆள் கிட்ட, அப்படி குரங்கு காதுல என்னதான் சொன்னேன்னு கேட்டானுங்க.
🐒 அவன் சொன்னான்...
🐒 ஃபர்ஸ்ட் குரங்குகிட்ட நான் சாப்ட்வேர்-ல வேல செய்றேன்னு சொன்னேன், உடனே சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு,
🐒 அடுத்து என்னோட சம்பளத்த சொன்னேன், அது அழுதுடுச்சு.
🐒 கடைசியா என் கம்பெனிக்கு வேலைக்கு ஆள் எடுக்கதான் இங்க வந்திருக்கேன்னு சொன்னேன்... அது ஓடியே போய்டுச்சி...!!
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக