Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 29 ஜூலை, 2021

இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..!

  சவுதி அரேபியா மக்கள்

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் சவுதி அரேபியா கொரோனா தொற்றைத் தடுக்கக் கடுமையாகக் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில் சவுதி அரசு தடை விதித்துள்ள நாடுகளுக்கு அந்நாட்டு மக்கள் யாரேனும் சென்றால் 3 வருடம் பயணத் தடையும், கடுமையான அபராதமும் விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா அறிவித்துள்ள ரெட் லிஸ்ட்-ல் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்பது தான் அதிர்ச்சியான தகவல்.

சவுதி அரேபியா மக்கள்

சவுதி அரேபியா மக்கள் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ள நாடுகளுக்குச் சென்றால் அது கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறும் செயலாகும். இந்நிலையில் சட்டத்தை மீறும் நபர் மீது 3 வருடம் பயணத் தடையும், கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்து அரசு பத்திரிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ்

உலக நாடுகளில் புதிய வகைக் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சவுதியில் இது பரவக் கூடாது என்பதற்காகக் கடுமையாகக் கட்டுப்பாடுகளைச் சவுதி அரசு தனது புதிய அறிக்கையில் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என அரசு செய்தி நிறுவனமான சவுதி பிரஸ் ஏஜென்சி அறிவித்துள்ளது.

இந்தியா

இந்நிலையில் சவுதி அரேபியா நாட்டின் மக்கள் பயணம் செய்யக் கூடாது என அரசு ரெட் லிஸ்ட் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லிபியா, சிரியா, லெபனான், ஏமன், ஈரான், துருக்கி, ஆர்மீனியா, எத்தியோப்பியா, சோமாலியா, காங்கோ, ஆப்கானிஸ்தான், வெனிசுலா, பெலாரஸ், இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளது.

கொரோனா

கொரோனா கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டும் சவுதி அரேபியாவில் இதுவரை 5,20,774 பேர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் தற்போது 11,136 பேர் தொற்று உடன் இருக்கிறார்கள். மேலும் மொத்த இதுவரை 8,189 பேர் இறந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக