Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 29 ஜூலை, 2021

பேடிஎம் நிறுவனத்தில் 20,000 பேருக்கு வேலை ரெடி.. மாதம் 35,000 ரூபாய் சம்பளம்..!

வர்த்தக விரிவாக்கம்

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் இந்தியாவில் மிகப்பெரிய ஐபிஓ திட்டத்திற்குத் தயாராகி வரும் நிலையில், சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காகப் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் ஆன்லைன் நிதியியல் சேவையில் கடுமையான போட்டி நிலவி வரும் காரணத்தால் பேடிஎம் தனது வர்த்தகத்தை நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட் வர்த்தகம்

இந்தியாவில் பேடிஎம், போன்பே, கூகிள்பே, ஜியோபே, வாட்ஸ்அப் பே எனப் பல முன்னணி நிறுவனங்கள் டிஜிட்டல் பேமெண்ட் வர்த்தகத்திற்காகக் கடுமையாகப் போட்டிப்போட்டு வருகிறது. இந்தப் போட்டியின் காரணமாகக் கூகிள் பே கூடத் தற்போது தனது ஸ்கிராச் கார்டில் Better Luck Next time-ku பதிலாகப் போனஸ் பணத்தை மீண்டும் அளிக்கத் துவங்கியுள்ளது.

பேடிஎம் திட்டம்

இந்த வேளையில் ஐபிஓ வெளியிடத் தயாராகும் பேடிஎம் தனது வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்யச் சுமார் 20,000 பேரை பீல்டு சேல்ஸ் எக்ஸ்கியூடிவ் பிரிவில் பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.

வர்த்தக விரிவாக்கம்

புதிதாகச் சேர்க்கப்படும் பீல்டு சேல்ஸ் எக்ஸ்கியூடிவ் ஊழியர்கள் பேடிஎம் நிறுவனத்தின் QR கோடு, பிஓஎஸ் இயந்திரம், பேடிஎம் சவுண்ட்பாக்ஸ், வேலெட், யூபிஐ, பேடிஎம் போஸ்ட்பெய்டு, வியாபாரிகள் கடன், இன்சூரன்ஸ் திட்டங்களை விற்பனை செய்யும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

20000 பேருக்கு வேலை

மேலும் பீல்டு சேல்ஸ் எக்ஸ்கியூடிவ் பிரிவில் சேர்க்கப்படும் 20000 பேரில் பெரும்பாலானோர் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பெரு நகரங்களில் பேடிஎம் போதுமான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. தற்போது விரிவாக்க பணிகள் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் செய்யப் பேடிஎம் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

35,000 ரூபாய் சம்பளம்

இதைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தில் பீல்டு சேல்ஸ் எக்ஸ்கியூடிவ்-ஆகச் சேர்வோருக்கு மாதம் 35,000 ரூபாய் சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் சேல்ஸ் பிரிவில் இருப்போருக்கு டாக்கெட் இருக்கும் என்பதை மறந்துவிடவும் கூடாது.

யூபிஐ பணப் பரிமாற்றம்

யூபிஐ பணப் பரிமாற்றத்தில் பேடிஎம் தற்போது 11 சதவீத சந்தை வர்த்தகத்தை மட்டுமே கொண்டு உள்ளது, ஆனால் போன்பே 45 சதவீதத்தையும், கூகிள் பே 35 சதவீதத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அளவீட்டை உயர்த்தவே தற்போது பேடிஎம் 20000 பீல்டு சேல்ஸ் எக்ஸ்கியூடிவ் பணியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக