Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 10 ஜூலை, 2021

பன்னீர் ப்ரை

 Paneer Fry Recipe In Tamil


மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் பன்னீர் ப்ரை. இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு பன்னீர் ப்ரை எப்படி செய்வதென்று தெரியாதா?

தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 200 கிராம்

* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்

ஊற வைப்பதற்கு...

* கெட்டி தயிர் - 1/4 கப்

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

* எண்ணெய் - 1-2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் பன்னீரை ஓரளவு மெல்லியத் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் சிறிது நீர் ஊற்றி, மிகவும் கெட்டியாக பிசையாமல், ஓரளவு நீராக கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் ப்ரை தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!