Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 30 ஜூலை, 2021

இத்துனூண்டு கார்ல வீட்டுக்கு இணையான வசதியா? இளம் பெண்ணின் கை வண்ணத்தால் உருவாகிய அழகிய மைக்ரோ கேம்பர் வாகனம்!

இத்தனூண்டு கார்ல வீட்டுக்கு இணையான வசதியா? இளம் பெண்ணின் கை வண்ணத்தால் உருவாகிய அழகிய மைக்ரோ கேம்பர் வாகனம்!

தனது மிக சிறிய காரை இளம்பெண் ஒருவர் வீட்டுக்கு இணையான வசதிக் கொண்ட வாகனமாக மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஃபியாட் நிறுவனத்தின் மிகச் சிறிய கார் மாடல்களில் 500-ம் ஒன்றாக இருக்கின்றது. இந்த காரே வீட்டிற்கு இணையான வசதிகளைப் பெற்ற ஓர் வாகனமாக மாறியிருக்கின்றது. இந்த மாற்றத்தை ஓர் இளம்பெண் செய்திருக்கின்றார் என்பது ஆச்சரியமளிக்கும் தகவலாக உள்ளது.

இத்தனூண்டு கார்ல வீட்டுக்கு இணையான வசதியா? இளம் பெண்ணின் கை வண்ணத்தால் உருவாகிய அழகிய மைக்ரோ கேம்பர் வாகனம்!

இதுவே உலகின் மிகச் சிறிய வீடு போன்ற வசதிக் கொண்ட வாகனம் ஆகும். ஹன்னா ஹியூஸ் எனும் இளம்பெண்ணே ஃபியாட் 500 காரை வீடாக மாற்றியமைத்தவர் ஆவார். வீடு என்றால் இந்த காரை ஓர் வீடாக நினைத்துக் கொள்ள வேண்டும். வீட்டைப் போன்று சகல வசதிகள் கொண்ட கேம்பர் ரக வாகனம் இதுவாகும்.

இத்தனூண்டு கார்ல வீட்டுக்கு இணையான வசதியா? இளம் பெண்ணின் கை வண்ணத்தால் உருவாகிய அழகிய மைக்ரோ கேம்பர் வாகனம்!

நீண்ட தூர பயணம் மற்றும் ட்ரெக்கிங்கின்போது பயன்படக் கூடிய ஓர் வாகனமே கேம்பர் ரக வாகனம். இந்த மாதிரியான வாகனமாகவே ஃபியட் 500 காரை ஹன்னா மாற்றியமைத்திருக்கின்றார். முதலில் கேம்பர் ரக வாகனத்தை உருவாக்க ஓர் வேனையே வாங்க ஹன்னா திட்டிமிட்டிருக்கின்றார்.

இத்தனூண்டு கார்ல வீட்டுக்கு இணையான வசதியா? இளம் பெண்ணின் கை வண்ணத்தால் உருவாகிய அழகிய மைக்ரோ கேம்பர் வாகனம்!

ஆனால், இதற்கு அவருடைய பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. பட்ஜெட் பெரியளவில் இருக்கும் என்பதால் தனது ஃபியாட் 500 காரையே கேம்பர் ரக வாகனமாக மாற்ற முடிவு செய்தார். இதன்படி தற்போது அவர் மாற்றியும் விட்டார். இதனை தனது கனவு வாகனமாக அவர் உருவாக்கியிருக்கின்றார்.

இத்தனூண்டு கார்ல வீட்டுக்கு இணையான வசதியா? இளம் பெண்ணின் கை வண்ணத்தால் உருவாகிய அழகிய மைக்ரோ கேம்பர் வாகனம்!

ஆகையால், தன்னைத் தவிர வேறு யாருக்கும் இந்த கேம்பர் வாகனத்தில் இடமில்லை என கூறியிருக்கின்றார். தன்னுடைய காதலனாக இருந்தாலும் இந்த வீட்டில் இடமில்லை என்று அவர் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஃபியாட் 500 காரை கேம்பர் ரக வாகனமாக மாற்ற 150 யூரோக்களை அவர் செலவு செய்திருக்கின்றார்.

இத்தனூண்டு கார்ல வீட்டுக்கு இணையான வசதியா? இளம் பெண்ணின் கை வண்ணத்தால் உருவாகிய அழகிய மைக்ரோ கேம்பர் வாகனம்!

இந்திய மதிப்பில் ரூ. 15,483 ஆகும். இது தோராயமாக வழங்கப்பட்ட மதிப்பாகும். இந்த மிகக் குறைந்த செலவிலேயே ஃபியாட் 500 காரை ஓர் சிறந்த கேம்பர் ரக வாகனமாக ஹன்னா மாற்றியிருக்கின்றார். சொகுசான படுக்கை, பொருட்களை வைத்துக் கொள்ள ஏதுவான ஸ்டோரேஜ் வசதி என பல வசதிகளை இந்த காரில் அவர் புகுத்தியிருக்கின்றார்.

இங்கிலாந்து நாட்டில் அண்மைக் காலங்களாக கேம்பர் ரக வாகன கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. பலர் பெரும் பொருட் செலவில் கேம்பர் ரக வாகனங்களை உருவாக்கி வருகின்றனர். 3 ஆயிரம் யூரோக்கள் தொடங்கி 10 யூரோக்கள் வரை இளைஞர்கள் செலவு செய்து வருகின்றனர். ஏன் இதற்கு மேலாகாவும் கேம்பர் வாகனங்களுக்கு செலவழிப்பவர்கள் இருக்கின்றனர்.

இத்தனூண்டு கார்ல வீட்டுக்கு இணையான வசதியா? இளம் பெண்ணின் கை வண்ணத்தால் உருவாகிய அழகிய மைக்ரோ கேம்பர் வாகனம்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் வெறும் 150 யூரோக்கள் செலவில் மட்டுமே சிறிய வீட்டை ஹன்னா உருவாக்கியிருப்பது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது முழுநேர பணி இடைவெளி நேரத்திலேயே ஹன்னா ஃபியாட் 500 காரை மைக்ரோ கேம்பர் வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றார்.

இத்தனூண்டு கார்ல வீட்டுக்கு இணையான வசதியா? இளம் பெண்ணின் கை வண்ணத்தால் உருவாகிய அழகிய மைக்ரோ கேம்பர் வாகனம்!

இதற்காக அவர் நான்கு வாரங்கள் செலவழித்திருக்கின்றார். அனைத்து உருமாற்ற பணிகளும் நிறைவடைந்தநிலையில் இங்கிலாந்தின் மிக முக்கியமான சுற்றுலா பகுதியான வேல்ஸ் (Wales)-க்கு மூன்று இரவு சுற்று பயணம் சென்றிருக்கின்றார்.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக