Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 30 ஜூலை, 2021

98% ஊழியர்களுக்கு வேக்சின் போட்டாச்சு.. ரிலையன்ஸ்-க்கு மட்டும் எப்படி வேக்சின் கிடைத்தது..?!

  முகேஷ் அம்பானி

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆம் இந்தியா முழுவதும் மாநில அரசுகள் போதிய வேக்சின் இல்லாமல் தவித்து வரும் நிலையிலும், அரசைத் தொடர்ந்து வேக்சினுக்காகக் கோரிக்கை வைத்து வரும் நிலையில் ரிலையன்ஸ் மிகவும் குறைந்த காலகட்டத்தில் 98 சதவீத ஊழியர்களுக்கு வேக்சின் போட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் மக்களின் உயிரைக் காக்கும் திரவ ஆக்சிஜனை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்து பல மாநிலங்களுக்கு விநியோகம் செய்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தக் கொரோனா காலத்தில் மக்களுக்குப் பல வகையில் உதவி செய்ய நிலையில், தனது ஊழியர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்தது. இதில் மிக முக்கியமானது ஊழியர்கள் அனைவருக்கும் வேக்சின் பாதுகாப்பு.

98% ஊழியர்களுக்கு வேக்சின்

இன்று ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்த பட்சம் வேக்சின் அளிக்கப்பட்டு உள்ளது என்றும், சுமார் 98 சதவீத ஊழியர்களுக்கு முழுமையான இரண்டு டோஸ் வேக்சின் அளிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கோவிட் வேக்சின்

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும், தயாரிக்கப்படும் கோவிட் வேக்சின் எண்ணிக்கையில் 25 சதவீதம் தனியார் மருத்துவமனை பெற அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மருத்துவமனையுடன் கூட்டணி சேர்ந்து தனது 98 சதவீத ஊழியர்களுக்கு வேக்சின் அளித்துள்ளது.

வேக்சின் பற்றாக்குறை

வேக்சின் வாங்குவதிலும், விநியோகம் செய்வதிலும் பல்வேறு பிரச்சனைகளை மத்திய அரசு சந்திக்கும் காரணத்தால் நாடு முழுவதும் வேக்சின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தியாவில் தற்போது நிலையின் படி வேக்சின் அளிக்கப்பட்டால் 75 சதவீத மக்களுக்கு வேக்சின் அளிக்கக் குறைந்தது 1.1 வருடம் ஆகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

தனியார் நிறுவனம்

இப்படியிருக்கும் நிலையில் ஒரு தனியார் நிறுவனம் எப்படி அனைத்து ஊழியர்களுக்கும் வேக்சின் அளிக்க முடியும். அரசை விடவும் தனியார் மருத்துவமனையும், தனியார் நிறுவனங்களும் வேக்சின் வழங்குவதில் சிறந்து விளங்குகிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐடி நிறுவனங்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போலவே ஹிந்துஸ்தான் யூனிலீவர் தனது 90 சதவீத ஊழியர்களுக்கு வேக்சின் அளித்துள்ளது. இதேபோல் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் நிறுவனங்கள் அனைத்தும் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு வேக்சின் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் நிலவரம்

இன்றளவும் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டத்திலும், டவுன், கிராமத்தில் வேக்சின் பற்றாக்குறை நிலவுகிறது. மக்கள் வேக்சின் போட்டுக்கொள்ளத் தாயாராகவும், காலை 6 மணி முதல் வரிசையில் காத்திருந்து வேக்சின் பெற்றுச் செல்கின்றனர். ஆனாலும் வேக்சின் இல்லை.

மக்கள் கருத்து

மக்களாகிய நீங்கள் சொல்லுங்க மத்திய அரசை விடவும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வேகமாகவும் சிறப்பாகவும் வேக்சின் அளிக்கிறதா..? உங்கள் கருத்து என்ன..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக