Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 30 ஜூலை, 2021

Airtel vs Jio: ஏர்டெல் திட்டத்துக்கு கடும் போட்டி அளிக்கும் ஜியோ திட்டம்: எது சிறந்தது?

Airtel vs Jio: ஏர்டெல் திட்டத்துக்கு கடும் போட்டி அளிக்கும் ஜியோ திட்டம்: எது சிறந்தது?

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்க்க பல முக்கிய திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. இவற்றில் இலவச அழைப்பு வசதிகள், தரவு வசதி ஆகியவற்றைத் தவிர இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.

ஏர்டெல் தனது மலிவான ரூ .49 திட்டத்தை நிறுத்தியுள்ளது. இப்போது ஏர்டெல்லின் ரூ .79 திட்டம்தான் அதன் அனைத்து திட்டங்களையும் விட மிகவும் மலிவான திட்டமாக உள்ளது.

ஆனால், இந்த திட்டத்திற்கு ஜியோவின் ரூ .75 திட்டம் கடும் போட்டியாக உள்ளது. ஒருபுறம், ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் தரவு மற்றும் அழைப்பு வசதிகள் உள்ளன, ஆனால், ஜியோவும் அதன் பயனர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை அளிக்கிறது. ஆனால் ஜியோவின் இந்த திட்டத்தை ஜியோபோன் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த இரண்டு திட்டங்களிலும் எது சிறந்த திட்டம் என இங்கே காணலாம்.

ஏர்டெல் ரூ .79 திட்டம்

ஏர்டெல்லின் (Airtel) ரூ .79 ப்ரீபெய்ட் திட்டத்தில், ரூ .64-க்கான டாக் டைம் கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.  இதனுடன், பயனர்களுக்கு 200 எம்பி தரவு கிடைக்கும்.

ரூ .49 திட்டத்தில், பயனருக்கு ரூ .38 டாக் டைம் மற்றும் 100 எம்பி டேட்டா கிடைக்கிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ஜியோ ரூ .75 திட்டம்

ஜியோவின் (Jio) ரூ .75 திட்டத்தின் பெயர் JIOPHONE ALL-IN-ONE PLAN ஆகும். இதில் வாடிக்கையாளர்கள் 3 ஜிபி தரவைப் பெறுவார்கள். இதில் அவர்கள் ஒரு நாளைக்கு 0.1 ஜிபி தரவைப் பெறுவார்கள். இதனுடன் 200 எம்பி தரவு கிடைக்கும். மேலும், இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இந்த திட்டத்தில், அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பை செய்யலாம். இந்த திட்டத்தில் (Recharge Plan) 50 எஸ்.எம்.எஸ்-சுக்கான வசதியும் கிடைக்கும். இதனுடன் நீங்கள் Jio Apps-க்கான சந்தாவையும் பெறுவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக